MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Biriyani Man : வசமாக சிக்கிய யூடியூபர் பிரியாணி மேன்... வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்த போலீஸ்

Biriyani Man : வசமாக சிக்கிய யூடியூபர் பிரியாணி மேன்... வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்த போலீஸ்

பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிராம் போலீசார் கைது செய்தனர்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 30 2024, 03:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Biriyani man vs Irfan

Biriyani man vs Irfan

யூடியூபில் கடந்த சில தினங்களாகவே அதிக ஹாட் டாப்பிக் ஆக இருந்த பெயர் என்றால் அது பிரியாணி மேன் தான். இவரின் ஒரிஜினல் பெயர் அபிஷேக். பிரியாணி மேன் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர், சக யூடியூபர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு அதன்மூலம் கவனத்தை ஈர்த்து வந்தார். குறிப்பாக யூடியூபர் இர்பானை சரமாரியாக விமர்சித்து அவரைப்பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Biriyani man, Tailor akka

Biriyani man, Tailor akka

பிரியாணி மேனின் இந்த தரக்குறைவான பேச்சுக்கு இர்பானும் பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பாப்புலராக இருக்கும் டெயிலர் அக்கா பற்றியும் விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்தார் பிரியாணி மேன், அவர் பிளவுஸ் வீடியோ என்கிற பெயரில் ஆபாச வீடியோ வெளியிடுவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் பிரியாணி மேனுக்கு யூடியூபர் இர்பான் மற்றும் டெயிலர் அக்கா ஆகியோரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... யூடியூபர் இர்பான் முதல் டெயிலர் அக்கா வரை ஒரு ஆள் விடாம வம்பிழுத்தவர்; யார் இந்த பிரியாணி மேன்? என்ன பிரச்சனை?

34
Biriyani man arrested

Biriyani man arrested

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் யூடியூப் நேரலையில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறி அபிஷேக் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அபிஷேக்கின் தாய் சரியான நேரத்தில் வந்து அபிஷேக்கின் உயிரை காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் படு வைரல் ஆனது. இதுவும் டிராமாவாக தான் இருக்கும் என்று அவரை விமர்சித்தும் சிலர் பதிவிட்டனர்.

44
biriyaniman abishek

biriyaniman abishek

இந்த நிலையில், யூடியூபர் பிரியாணி மேன் அபிஷேக் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார். பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் யூடியூபர் அபிஷேக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பெயரில் அபிஷேக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் திடீர் ரைடு நடத்திய அமலாக்கத்துறை

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved