கொஞ்ச நாள் அடங்கி இருந்த தலைநகரில் மீண்டும் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் சென்னை மக்கள்!
சென்னையில் உணவு விநியோக ஊழியர் காளிதாஸ் ரவுடி மணிகண்டனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதையில் ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Chennai Commissioner Arun
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு சென்னை புதிய காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றதில் கைது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து ரவுடிகள் அடங்கி ஓடுங்கி இருந்து வந்தனர். இதனால், கொலை சம்பங்கள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் தலை தூக்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை அம்பத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி (36) என்பவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது சென்னையில் மற்றொரு கொலை அங்கேறியுள்ளது.
Chennai Crime News
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(26). உணவு விநியோகம் ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு முகப்பேர் அருகே பாடி குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மற்றும் நண்பர்களுடன் காளிதாஸ் மது அருந்தியுள்ளார். அப்போது, போதை தலைகேறியதும் காளிதாசுக்கும், மணிகண்டன் என்ற மணி (31) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டர். பின்னர் சக நண்பர்கள் சண்டையை விலக்கி சமாதானம் செய்து வைத்தனர்.
Chennai Murder
பின்னர், காளிதாசை செல்போனில் அழைத்த ரவுடி மணிகண்டன் சமாதானம் பேசி மீண்டும் பாடி புதூர் பகுதிக்கு மது அருந்துவதற்காக அழைத்துள்ளார். இதை நம்பி காளிதாஸ் சென்றுள்ளார். அப்போது இருவரும் மீண்டும் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கு ஏறியதும் காளிதாசை, ரவுடி மணிகண்டன் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னையில் அதிர்ச்சி! அரசு பள்ளியில்பிளஸ் டூ மாணவி கர்ப்பம்! யார் காரணம் தெரியுமா? விசாரணையில் பகீர்!
Police Arrest
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கோயம்பேடு பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.