இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை! அடப்பாவி! உன்னை நம்பி தானே அனுப்பி வச்சேன்! இப்படி பண்ணிட்டியே! கதறும் மாமா
தஞ்சையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே உள்ள தச்சன்குறிச்சி உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சர்மிளா வந்துள்ளார். இதனையடுத்து தொடர்ந்து விடுப்பு எடுத்து தச்சங்குறிச்சியில் உள்ள தாய் மாமா பிரபு வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக பிரபு உள்ளிட்டோர் சென்று விட்டனர். அதனால் தன்னையும் அழைத்து செல்லுமாறு தாய் மாமா பிரபுவிடம் ஷர்மிளா செல்போனில் கூறியுள்ளார்.
தன்னால் மீண்டும் வந்து அழைத்து செல்ல முடியாத நிலையில் பிரபு தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கருப்புசாமியை (30) அனுப்பி வைத்தார். ஷர்மிளாவை கருப்பசாமி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் இருவரும் வராததால் சந்தேகமடைந்த பிரபு இருவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க;- ரயிலில் ஐடி பெண் ஊழியரிடம் அந்தரங்க உறுப்பை காட்டிய காவலர்!துணிச்சலுடன் வீடியோ எடுத்து என்ன செய்தார் தெரியுமா?
இதனால், அதிர்ச்சியடைந்த பிரபு இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்போது நாட்டாணி அருகே உள்ள முத்துவாரி நீர்த்தேக்கம் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் ஷர்மிளா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு அழுது கதறியபடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷர்மிளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஷர்மிளாவை வலுக்கட்டாயமாக கருப்பசாமி பாலியல் பலாதத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கருப்புசாமியை போலீசார் கைது செய்துள்ளார்.