- Home
- Gallery
- குழந்தைகள் பட்டாளத்துடன் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள ‘வானவன்’ படப்பிடிப்பு நிறைவு!
குழந்தைகள் பட்டாளத்துடன் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ள ‘வானவன்’ படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் யோகி பாபு, குழந்தைகள் பட்டாளத்துடன் இணைந்து நடித்துள்ள 'வானவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணிகளை படக்குழு துவங்கியுள்ளது.

‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு, ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்த கையேடு, படக்குழு தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகளைத் துவக்கியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்த கையேடு, படக்குழு தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகளைத் துவக்கியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான மாஸ்குரேட் சீரிஸை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் கதை எழுத, ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
Shah Rukh Khan Photos: குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்! வைரலாகும் போட்டோஸ்!
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடிக்கப்பட்டுள்ளது. EDENFLICKS PRODUCTIONS பேனரின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது.விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.