- Home
- Gallery
- இமான் - எஸ்.கே. மோதல் முதல் பருத்திவீரன் பஞ்சாயத்து வரை... 2023ல் கோலிவுட் சந்தித்த சர்ச்சைகள் ஒரு பார்வை
இமான் - எஸ்.கே. மோதல் முதல் பருத்திவீரன் பஞ்சாயத்து வரை... 2023ல் கோலிவுட் சந்தித்த சர்ச்சைகள் ஒரு பார்வை
2023-ம் ஆண்டு கோலிவுட்டில் பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் சர்ச்சைகளும் நிரம்பி வழிந்த ஆண்டாக இது அமைந்துள்ளது. இந்த ஆண்டு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்.

Tamil cinema controversies
2023-ம் ஆண்டு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வியாபார ரீதியாக வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்துள்ளது. அதேநேரத்தில் இந்த வருடம் தமிழ் சினிமா சந்தித்த சர்ச்சைகளும் ஏராளம். சூப்பர்ஸ்டார் சர்ச்சை தொடங்கி டி இமான் - சிவகார்த்திகேயன் மோதல், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரம் என சர்ச்சைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
சூப்பர்ஸ்டார் சர்ச்சை
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு சொந்தக்காரராக இருந்தாலும், விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் ஒருகட்டத்துக்கு மேலே பிரபலங்களும் இணைந்துகொண்டனர். ரஜினிக்கு ஆதரவாக கலாநிதி மாறன் பேச, மறுபுறம் விஜய் தரப்பில் இருந்து ரத்னகுமார் அதற்கு பதிலடி கொடுக்க என நீண்டு கொண்டே சென்ற சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் விஜய் லியோ பட சக்சஸ் மீட்டில் முற்றுப்புள்ளி வைத்தார். அதில் ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் அது ரஜினி மட்டும் தான் என விஜய் கூறியதை அடுத்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
திரிஷா - மன்சூர் அலிகான்
லியோ படத்தில் நடிகை திரிஷா உடன் தனக்கு நெருக்கமான காட்சிகள் இல்லை என்றும், ஹீரோயின்களுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது குறித்தும் கொச்சையாக பேசிய மன்சூர் அலிகானுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரம் மகளிர் ஆணையம் வரை சென்று மன்சூர் அலிகான் மீது கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மன்சூர் மன்னிப்பு கேட்ட பின்னர் திரிஷாவும் அவர் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டாம் என வழக்கை வாபஸ் வாங்கினார். அதன்பின்னர் மீண்டும் இந்த பிரச்சனையை கிளறிவிட்ட மன்சூர் திரிஷா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
சீனு ராமசாமி - மனிஷா யாதவ்
இயக்குனர் சீனு ராம்சாமி இடம் பொருள் ஏவல் என்கிற படத்தை இயக்கியபோது நடிகை மனிஷா யாதவ்வுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிகையாளர் பிஸ்மி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சீனு ராமசாமி இதற்கு மறுப்பு தெரிவிக்க மறுபுறம் சம்பந்தப்பட்ட நடிகை மனிஷா யாதவ்வே இது உண்மை தான் என வெளிப்படையாக கூறியதோடு சீனு ராமசாமி செய்த சில்மிஷ வேலைகள் குறித்து வெளிப்படையாக கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிரதீப் ரெட் கார்டு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் டைட்டில் ஜெயிக்கும் அளவுக்கு தகுதியுள்ள போட்டியாளராக வலம் வந்த பிரதீப் ஆண்டனி திடீரென ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களிடம் ஆபாசமாக பேசியதாகவும், அவரால் அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது பிக்பாஸ் டீம்.
விசித்ரா மீடூ விவகாரம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள விசித்ரா, அதில் தனக்கு சினிமாவில் நேர்ந்த பாலியல் சீண்டல்கள் பற்றி பேசியதோடு, அந்த ஹீரோ யார் என்பதையும் ஓப்பனாக கூறினார். தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்தபோது தினந்தோறும் இரவு தனது ஓட்டல் அறையை தட்டி டார்ச்சர் செய்தார்கள் என்றும், பாலகிருஷ்ணாவே தன்னை நேரடியாக ரூமுக்கு அழைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இமான் - சிவகார்த்திகேயன் மோதல்
2023-ல் அதிகம் விவாதிக்கப்பட்ட சர்ச்சைகளில் டி இமான் - சிவகார்த்திகேயன் இடையேயான மோதல் விவகாரமும் ஒன்று. சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இமான் ஒரு பேட்டியில் கூறியதை அடுத்து, சிவகார்த்திகேயனையும் டி.இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட்டையும் ஒப்பிட்டு பேசத்தொடங்கினர். பின்னர் இதுகுறித்து மோனிகா விளக்கம் அளித்துவிட்டாலும் சிவகர்த்திகேயன் இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வருகிறார்.
பருத்திவீரன் பஞ்சாயத்து
பருத்திவீரன் படம் ரிலீஸ் ஆகி 15 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் பஞ்சாயத்து இந்த ஆண்டு பூதாகரமாக வெடித்தது. இயக்குனர் அமீரை திருடன் எனக்கூறி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் கூறியதை அடுத்து, அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகியோர் பருத்திவீரன் பட ரிலீஸ் சமயத்தில் என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறினர். இந்த விவகாரத்தில் கார்த்தி, சூர்யா இருவருமே மெளனம் காத்து வருவதால் இந்த பிரச்சனை இன்னும் முடிந்தபாடில்லை.
இதையும் படியுங்கள்... Salaar Review : அடுத்த பாகுபலியா? இல்ல அடுத்த ஆதிபுருஷ்-ஆ? எப்படி இருக்கு பிரபாஸின் சலார்? முழு விமர்சனம் இதோ