- Home
- Gallery
- சர்வதேச யோகா தினம்.. சமந்தா முதல் ராஷ்மிகா வரை.. யோகா மூலம் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகைகள்..
சர்வதேச யோகா தினம்.. சமந்தா முதல் ராஷ்மிகா வரை.. யோகா மூலம் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நடிகைகள்..
யோகா மூலம் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் சில நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

South Actresses Doing Yoga
வாழ்வில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஜூன் 21-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகைகள் பலரும் ட்ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கான முறையாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் யோகா மூலம் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் சில நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Samantha Doing Yoga
சமந்தா
உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாக வைத்திருக்கும் சிறந்த நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தனது தீவிர ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது உடற்பயிற்சி வழக்கத்தின் காட்சிகளைப் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது யோகா அமர்வில் ஈடுபடும் காட்சிகளை பகிர்ந்துள்ளார்.
Rashmika Mandanna Doing Yoga
ராஷ்மிகா மந்தனா
நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனா தனது பரபரப்பான ஒர்க்அவுட் அமர்வுகளின் காட்சிகளை ரசிகர்களுடன் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அவர்களை ஊக்குவித்து வருகிறார். தனது ஒர்க்அவுட் அமர்வின் கிளிப்பை ராஷ்மிகா இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Rakul Preet Singh Doing Yoga
ரகுல் ப்ரீத் சிங்
யோகாவை தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி உள்ள நடிகைகளில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர். தனது இன்ஸ்டா பக்கத்தில் யோகா செய்யும் போட்டோக்களை அவர் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
Rashii Khanna Doing Yoga
ராஷி கண்ணா
ராஷி கண்ணாவின் உடற்பயிற்சி முறை அவரது ரசிகர்களையும் பின்தொடர்பவர்களையும் அடிக்கடி ஊக்குவிக்கிறது. அவர் தனது ரசிகர்களுக்காக உடற்பயிற்சி செய்யும் காட்சிகளை அடிக்கடி இன்ஸ்டா பகிர்ந்து வரிறார். மேலும் தனது தீவிர உடற்பயிற்சி அமர்வின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
Tamannaah Bhatia Doing Yoga
தமன்னா
உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் பிரபலங்களில் தமன்னா முக்கியmaanavar. ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ரசிகர்களை ஊக்குவித்து வருகிறார். மேலும் தனது உடற்பயிற்சியின் முக்கிய ஃபிட்னஸ் இலக்குகளை வழங்கும் காட்சிகளை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். யோகா செய்யும் புகைப்படங்களை நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.