சீனாக்காரன்னா சும்மாவா.. வேற மாறி அம்சங்கள்.. இந்தியாவில் களமிறங்கிய Vivo Pad 3.. எப்படி இருக்கு?
தற்போது சந்தையில் டேப்லெட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. OTT வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யவும், கேமிங் மற்றும் கல்விக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் விவோ நிறுவனம் தனது விவோ பேட் 3யை அறிமுகப்படுத்தி உள்ளது.
Vivo Pad 3
சீன எலக்ட்ரானிக் நிறுவனமான விவோ புதிய டேப் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த டேப் Vivo Pad 3 என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது இந்த டேப்லெட் பற்றிய முழு விவரங்களை காணலாம்.
Vivo
இந்த டேப்லெட் விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டின் அம்சங்களைப் பொறுத்த வரையில், ஸ்னாப்டிராகன் 8எஸ் தலைமுறை 3 சிப்செட் செயலி வழங்கப்பட்டுள்ளது.
Vivo Pad 3 Price
இதில் 12.1 இன்ச் எல்சிடி திரை உள்ளது. 144Hz புதுப்பிப்பு வீதம், அதிகபட்ச பிரகாசம் 600நிட்ஸ் ஆகும். இது ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் செயல்படுகிறது. இது 10,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 44 வாட்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.
Vivo Pad 3 Specs
விலையைப் பொறுத்தவரை, 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 28,700, 512 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 35 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்த வரை 8 மெகா பிக்சல்கள் கொண்ட கேமராவைக் கொண்டுள்ளது.
Vivo Tablet
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளது. இதன் எடை 589.2 கிராம். இணைப்பைப் பொறுத்தவரை, இது Wi-Fi 6 மற்றும் புளூடூத் 5.4 இணைப்புகளை ஆதரிக்கிறது. USB 3.2 Gen 1 Type-C போர்ட் வழங்கப்பட்டுள்ளது.