- Home
- Gallery
- ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித்...இந்தியாவிற்கு திடீர் விசிட்....கொண்டாடும் இந்தியர்கள்..என்ன காரணம் தெரியுமா..?
ஆஸ்கர் நாயகன் வில் ஸ்மித்...இந்தியாவிற்கு திடீர் விசிட்....கொண்டாடும் இந்தியர்கள்..என்ன காரணம் தெரியுமா..?
Will Smith: உலகளவில் பிரபலமான நடிகரான வில் ஸ்மித், ஆஸ்கர் பிரச்சனைக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இந்த நிகழ்வு இந்தியர்களிடையே அதிகம் கவனம் பெற்று வருகிறது.

will smith
94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த மாதம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், கிங் ரிச்சர்ட்டின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது.

will smith
விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக் கேலியாக பேசினார். இதனை பொறுத்து கொள்ள முடியாமல், வில் ஸ்மித், விழா மேடையிலேயே வைத்து கிரிஸ் ராக்கை அடித்தார்.
will smith
இதையடுத்து, வில் ஸ்மித் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியா என்ற நோய் தோற்றால் போராடி வரும், தன்னுடைய மனைவியை கிண்டல் செய்ததால் தான் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
will smith
இருந்த போதும் அவர் மீது ஆஸ்கர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக நடிகர் வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் நிர்வாகம் 10 ஆண்டுகள் தடை விதித்து அவரது செயலை கண்டித்துள்ளது. ஆனால், ஆஸ்கர் விருதை திருப்பித் தர தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
will smith
இதையடுத்து, ஆஸ்கர் பிரச்சனைக்குப் பிறகு நடிகர் வில் ஸ்மித் வெளியே எங்கேயும் அதிகம் தென்படாமல் இருந்தார். இந்நிலையில், வில் ஸ்மித் முதல்முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.
will smith
ஆம், தற்போது இந்தியா வந்துள்ள அவரை, மும்பை விமான நிலையத்தில் வெள்ளை உடை அணிந்த நபருடன் பேசி கொண்டு இருக்கும் போது அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
will smith
ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு முதல் முதலாக வில் ஸ்மித் அதுவும் இந்தியா வந்துள்ளதை பலரும் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளனர். முன்னதாக, ஆஸ்கர் பிரச்சனையில் உலக நாடுகள் பலரும் வில் ஸ்மித்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்தியர்கள் பலரும் அவரது செயலை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.