கோயிலில் திருமணம் செய்தால் இப்படியெல்லாம் நன்மைகள் நடக்குமா?
Temple Of Marriage : கோயிலில் திருமணம் செய்து கொள்வது எவ்வளவு நல்ல பலன்களை தரும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
நம் முன்னோர் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். இறைவனுக்கு முன்னால் வாழ்க்கைத் துணையின் கரம் பிடிப்பது வழக்கமாகவே இருந்து வந்தது. சிலருக்கு ஜாதக தோஷங்கள் இருக்கும். அதன் காரணமாக கோயிலில் திருமணம் முடித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோயிலில் திருமணம் மாதிரியான சுப காரியங்கள் நடக்கும் என்பதற்காகவே அந்த காலத்தில் கோயில் பலர் உட்கார வசதியாக கட்டப்பட்டுள்ளது. அதிலும் அப்போது கோயிலில் திருமணம் செய்து கொள்பவர்கள் பிரிந்து செல்ல மிகவும் யோசித்தனர். அவர்கள் உறவு ஜென்ம ஜென்மமாய் தொடர்வதாய் நினைத்தார்கள். இறைவன் சன்னி தானத்தில் திருமணம் நடைபெறுவதால் இறை ஆசியுடன் திருமண வாழ்க்கை இனிதாய் ஆரம்பிக்கிறது.
கோயிலில் திருமணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். தம்பதிகளின் வாழ்வில் நேர்மறை மாற்றங்கள் தான் உண்டாகும். கோயில்களில் பொதுவாக மந்திரங்கள் உச்சரித்தல், ஸ்லோகங்கள் சொல்லுதல், இறைவனுக்கு ஆராதனை, பாடல்கள் என ஆன்மீக காரியங்கள் அதிகம் நடக்கும். இது கோயிலில் நேர்மறை ஆற்றலை தக்க வைத்திருக்கும். இங்கு மணவாளன் கையினால் மாங்கல்யம் ஏந்தி கொள்தல் வாழ்வில் நல்ல பலன்களையே கொண்டு வரும்.
இதையும் படிங்க: இந்து திருமணத்தில் மணமகள் எப்போதும் மணமகனின் இடது பக்கத்தில் உட்காருகிறாள்.. ஏன்? உண்மையான காரணம் இதோ..
ஒரு சிலரின் ஜாதகங்களுக்கு திருமணம் கைகூடி வருவதை பெரிய விஷயமாக இருக்கும். அதையும் மீறி தடைகளை தாண்டி அவர்களுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டாலும், அந்த திருமணம் எத்தனை ஆண்டுகள் வலுவாக இருக்கும் என்பது கேள்வி குறிதான். ஜாதக அமைப்பு அப்படியிருக்கும். அப்படியான ஜாதக அமைப்பு கொண்டுள்ளவர்கள், தோஷம் உடையவர்கள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் ஜாதகதாரர்கள் கட்டாயம் கோயிலில் திருமணம் செய்ய வேண்டும். இதுவே அவர்களுக்கு நல்லது. கோயிலில் தாலி கட்டி மூலவர் ஆசியை முதலில் பெறும் தம்பதிகள் பாக்கியசாலிகள்.
இதையும் படிங்க: திருமண விழாக்களில் முகூர்த்த கால் அல்லது பந்தக்கால் நடுவது ஏன்..? உங்களுக்கு தெரியாத ரகசியம் இதோ!!
நான்கு சுவர்களுக்குள் அய்யர் மந்திரம் ஓத சான்றோர் முன் தாலி கட்டுவதை விட, கோயிலில் இறைவன் திருபாதத்தில் தாலி கட்டி கொள்வது தான் நல்லது. இதைவிட பெரிய ஆசீர்வாதம் வேறு இருக்க முடியாது.