தமிழக அமைச்சரவை மாற்றம் என பரப்பியது யார்.? விஜய்யை டம்மி செய்ய நடத்தப்பட்ட நாடகமா.?
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக களம் இறங்கியுள்ள விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். விஜயின் அரசியல் வருகையால் திமுக, அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில், விஜய் கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் விஜய் பேச்சை டம்மி செய்யும் வகையில் தமிழக செய்தி தொடர்பு துறை செயல்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
vijay
நடிகர் விஜய்யின் அரசியல்
தமிழகத்தில் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இதனையடுத்து கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் முமமுரமாக தொடங்கினார். திராவிட கட்சிகளுக்கு போட்டியாக ஒரே நாளில் பல லட்சம் பேர் விஜய் கட்சியில் இணைந்தனர்.
கட்சி கொடி அறிமுகம்
இந்தநிலையில் அடுத்தகட்டமாக செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி அறிமுக விழா நேற்று நடைபெற்றது. கொடியில் அடர்சிவப்பு, மஞ்சள் நிற பின்னணியில் 2 போர் யானைகள், வாகை மலர் ஆகியவை அக்கட்சி கொடியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தின் பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.
விஜய் பேச்சை டம்மி செய்ய திட்டமா.?
நடிகர் விஜய் அரசியல் வருகையால் திமுக, அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் கொடி அறிமுகம் மற்றும் விஜய் பேச்சை டம்மி செய்யும் வகையிலும் தமிழக செய்தி தொடர்பு துறை செயல்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் பேச்சை ஊடகங்கள் நேரலை ஒளிபரப்பு செய்வதை தடுக்கவே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசின் டிஐபிஆர்-ஐ பயன்படுத்தி பொய் செய்தியை திமுக ஐடி விங் பரப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் உண்மையா.?
காலை 9.25 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி தலைமை செய்தியாளர்கள், எடிட்டர் போன்றவர்களுக்கு அமைச்சரவை மாற்றம் , மூத்த அமைச்சர் ஒருவர் உட்பட 3 அமைச்சர்கள் விடுவிக்கப்பட உள்ளனர் என்ற பொய்யான செய்தி்யை அனுப்பியுள்ளனர். இந்த தகவலை உடனடியாக வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக நடிகர் விஜய் பேச்சிற்கு நடுவே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக செய்தி வெளியானது.
திமுக தான் காரணம்
மாலை நாளிதழ்களிலும் பெரிய அளவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்ற செய்தியும் முதல் பக்க பேனரில் இடம்பெற்றது. இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலினிடம் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது அப்படி எந்த தகவலும் எனக்கு வரவில்லையென கூறினார். எனவே நடிகர் விஜய் பேச்சை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என்ற காரணத்தால் இது பொன்ற நடவடிக்கையில் திமுக ஈடுபட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.