சைலேந்திரபாபுவிற்கு நோ.. எஸ்.கே. பிரபாகருக்கு ஓகே சொன்ன ஆளுநர்- காரணம் என்ன.?
தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபுவை அரசு பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்து பலமுறை கோப்புகளை புறக்கணித்த நிலையில், கூடுதல் செயலாளராக பணியாற்றி வரும் எஸ்.கே. பிரபாகர் நியமனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
ஆளுநர்- முதல்வர் மோதல்
தமிழக அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில் டிஎன்பிஎஸ்சி முக்கிய பங்கு விகிக்கிறது. இந்த துறையின் மூலம் பல்வேறு பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறைக்கு பல ஆண்டுகாலமாகவே தலைவர் இல்லாத நிலை நீடித்து வந்தது. இதனையடுத்து திமுக ஆட்சி காலத்தில் தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற பிறகு அவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.
சைலேந்திரபாபு நியமனம்- ஆளுநர் எதிர்ப்பு
சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கும், 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்யவதற்கான பெயர்களை தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால் ஆளுநர் ரவி, சைலேந்திரபாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிப்பது தொடர்பான கோப்புகளில் ஒப்புதல் கொடுக்க மறுத்தார். இதன் காரணமாக தமிழக ஆளுநரோடு தமிழக அரசு தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்தது.
பல முறை கோப்புகளை ஆளுநருக்கு திருப்பி அனுப்பியது. ஆனால் ஆளுநர் தரப்போ டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என குற்றம்சாட்டியது.
tnpsc
எஸ்.கே.பிரபாகருக்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர்
இந்தநிலையில் தமிழக அரசின் மூத்த அதிகாரியாக இருந்த எஸ்.கே.பிரபாகரை ஆளுநர் ரவி டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் யார் இந்த எஸ்.கே.பிரபாகர் என்று பார்க்கும் போது, விருதுநகரைச் சேர்ந்தவரான எஸ்.கே. பிரபாகர், பொறியியல் பட்டம் பெற்றவர். கடந்த 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ் ஆவர், தமிழகத்தில் தனது பணியை தொடங்கியவர் சேலத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றினார். பின்னர் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
கருணாநிதியின் செயலாளராக எஸ்.கே.பிரபாகர்
இதனையடுத்து முதலமைச்சர் மு.கருணாநிதியின் செயலாளராக 2008 முதல் 2012 வரை பதவி வகித்தார். பின்னர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநர், எரிசக்தித் துறை செயலாளராகவும் பணியாற்றினார். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் உள்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது வருவாய் துறை கமிஷனராக பணியாற்றி வரும் எஸ்.கே.பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 6 ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 தொகுதியில் போட்டி.? காங்கிரஸ்க்கு செக் வைத்த திமுக.! பல்டி அடிக்க காத்திருக்கும் கதர்
ஜவாஹிருல்லா எதிர்ப்பு
இதனிடையே எஸ்.கே.பிரபாகர் நியமனத்திற்கு திமுக கூட்டணி கட்சியே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள பதிவில், பாஐக மாநிலத் தலைவருடன் உறவாடியவர் எஸ்.கே.பிரபாகர் என கூறியுள்ளார்.
உள்துறை செயலாளராக இருந்தபோது செயல்திறன் இன்மையினால் மாற்றப்பட்டருமான இவரை சமூக நீதியை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பொறுப்பை ஐந்தாண்டுகளுக்கு வழங்குவது வேதனைக்குரியது என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
அண்ணாமலையோடு நெருக்கமா.?
இந்த சூழ்நிலையில் எஸ்.கே.பிரபாகர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. மேலும் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள எ.வ.வேலுவின் பரிந்துரையின் பேரிலையே எஸ்.கே.பிரபாகர் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.