மாமனாரின் சொத்து மதிப்பு ரூ. 53,800 கோடி.. ஹீராமண்டி நடிகை இந்த கோடீஸ்வரரின் மருமகளா?
ஹீராமண்டி நடிகை ஷர்மின் சேகல் இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

Heeramandi
சஞ்சய் லீலா பன்சாலியின் ஹீராமாண்டி என்ற வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ளது. இந்த சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், விமர்சகர்கள் இந்த சீரிஸ்க்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதிரி, ரிச்சா சத்தா, சஞ்சிதா ஷேக், ஷர்மின் சேகல் மேத்தா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில் ஷர்மின் சேகல் இந்தியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றுடன் தொடர்பு கொண்டுள்ளார். திரைப்பட நிர்வாகி தீபக் சேகல் மற்றும் திரைப்பட எடிட்டர் பேலா சேகல் ஆகியோரின் மகள் தான் ஷர்மின்சேகல். ஷர்மினின் தந்தை தற்போது முன்னணி தயாரிப்பு நிறுவனமான அப்லாஸ் என்டர்டெயின்மென்ட்டின் கண்டண்ட் தலைவராக உள்ளார். அவரது தாயார் ஒரு திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிகிறார்.
சஞ்சய் லீலா பன்சாலியின் காமோஷி, தேவதாஸ் மற்றும் பிளாக் போன்ற பல படங்களில்பணிபுரிந்துள்ளார், சஞ்சய் லீலா பன்சாலியின் இளைய தங்கை தான் பேலா சேகல். எனவே இவரின் தங்கை மகள் தான் ஷர்மின், ஷர்மினின் தந்தைவழி தாத்தா மோகன் சேகல் ஒரு வெற்றிகரமான திரைப்பட இயக்குநராக இருந்தார், புது தில்லி, சவான் படோன், ராஜா ஜானி மற்றும் ஏக் ஹி ராஸ்தா போன்ற படங்களைத் இயக்கினார்.
தனது. 40 வருட வாழ்க்கையில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமா மாலினி, ரேகா, அசோக் குமார், வைஜந்திமாலா, சஷி கபூர் மற்றும் மனோஜ் குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களை படம் இயக்கினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஷர்மின் அமன் மேத்தா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சமீர் மேத்தா என்ற தொழிலதிபரின் மகன் தான் இந்த அமன் மேத்தா. சமீர் மற்றும் அவரின் சகோதரர் சுதிர் மேத்தா டோரண்ட் குழுமத்திற்கு தலைமை தாங்குகின்றனர், இது மருந்து, மின்சாரம், எரிவாயு மற்றும் நோயறிதல் துறைகளை உள்ளடக்கிய ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யமாகும்.
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர் பட்டியல் அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, சமீர் மேத்தாவின் சொத்து மதிப்பு 6.44 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 53,800 கோடி. மேத்தா சகோதரர்களின் முதன்மை நிறுவனமான - டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் - ஃபோர்ப்ஸ் படி $4.6 பில்லியன் (ரூ 35,000 கோடி) வருவாய் ஈட்டுகிறது.
ஷர்மின் தனது 18வது வயதில் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலாவில் தனது மாமாவுக்கு உதவியாக பாலிவுட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி மற்றும் கங்குபாய் கதியாவதி ஆகிய மூன்று படங்களில் உதவியாளராக ஷர்மின் பணியாற்றினார்.
அவர் 2019 ஆம் ஆண்டு வெளியான மலால் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் 2022ல் வெளியான அதிதி பூதோ பாவாவில் அவர் நடித்தார். ஹீராமண்டி தான் ஷர்மினின் முதல் வெப் சீரிஸ் ஆகும்.