அன்று கோணிப்பையே உடை.. இன்று 350 கோடி டாலருக்கு சொந்தக்காரி - யார் இந்த Oprah Winfrey?
Oprah Winfrey Net Worth : அமெரிக்காவின் மிகப்பெரிய நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வருபவர் தான் Oprah Winfrey.
யார் இந்த Oprah?
இரண்டாம் உலகப்போரால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களில் ஓப்ராவின் குடும்பமும் ஒன்று. ஓப்ரா 29 ஜனவரி 1954ம் ஆண்டு அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் பிறக்கிறார். தந்தை இல்லாமல், தாய் வழி பாட்டி ஹாட்டி மே லீயின் பாதுகாப்பில் வளரும் ஓப்ரா, தனது வாழ்க்கையின் முதல் ஆறு ஆண்டுகளை உடுத்த சரியான உடைகூட இல்லாமல், உருளைக்கிழங்குகளை கட்டும் கோணியை மட்டுமே ஆடையாக அணிந்து வலம் வருகிறார்.
அவருக்கு 8 வயது இருந்தபோது, மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயான தனது அம்மாவோடு அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள மில்வாக்கிக்கு அவர் குடிபெயர்ந்தார். இன பாகுபாடு அதிகம் இருந்த காலமது என்பதால், பல சோதனைகளை கண்டு தான் ஓப்ரா வளர்ந்தார்.
விஜய், ரஜினியை விட 13 மடங்கு அதிக சொத்துக்கு அதிபதி! இந்தியாவின் பணக்கார நடிகர் இவரா?
Host Oprah Winfrey
1962ம் ஆண்டு வாக்கில், தனது இரண்டு மகள்களையும் பராமரிக்க முடியாமல் போனதால், ஓப்ராவின் தாய் வெர்னிடா, அமெரிக்காவின் நாஷ்வில்லியில் இருந்த ஓப்ராவின் தந்தை வெர்னனுடன் வாழ அவர் அனுப்பிவைத்தார். அங்கு தனது 9வது வயதில், சொந்த உறவினர் ஒருவராலேயே பாலியல் கொடுமைகளை அனுபவித்தார் என்பது கொடூரத்தின் உச்சம்.
மீண்டும் ஒரு மகள் மற்றும் மகனை பெற்றுக்கொண்ட ஓப்ராவின் தாய், பின்னர் தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக அவர்களை தத்தெடுக்கும் மையங்களில் ஒப்படைத்தார். அதில் அந்த மகன், கடந்த 2009ம் ஆண்டு எய்ட்ஸ் நோயால் காலமானதாகவும் சில தகவல்கள் உண்டு.
Oprah Winfrey
தனது 29வது வயது வரை சொல்லிமாளாத துயரங்களை அனுபவித்த ஓப்ராவிற்கு கடந்த 1986ம் ஆண்டு விடிவுகாலம் பிறந்தது என்றே கூறலாம். அதுவரை ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டுமே நடத்தி வந்த Talk Showகளை எடுத்து நடந்த துவங்கினார் ஓப்ரா. 1986 ஆண்டு "The Oprah Winfrey Show" என்ற தனது நிகழ்ச்சியை பெரும் போராட்டங்களுக்கு பிறகு துவங்கினார்.
சுமார் 25 சீசன்கள், 4561 எபிசோடுகளை கடந்து, சென்ற 2011ம் மே 25ம் தேதி அந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. அதுவரை அமெரிக்காவில் அப்படி ஒரு வரவேற்பை பெற்ற டாக் ஷோவை யாருமே கண்டதில்லை என்றே கூறலாம். அவருடைய இந்த 34 ஆண்டுகால பயணத்தில் பல விருதுகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளார் ஓப்ரா.
Television Host Oprah Winfrey
சிறுவயதில் சரியான ஆடை கொண்டு உடலை மறைக்க முடியாமல் வெறும் கோணியை கொண்டு உடலை மறைத்த ஓப்ராவிடம் இன்று கணக்கிலடங்காத ஆடம்பர ஆடைகள் உள்ளது. 70 வயதை எட்டிவிட ஓப்ரா, கடந்த 1986ம் ஆண்டு முதல் ஸ்டெட்மேன் கிரஹாம் என்பவருடன் வாழ்ந்து வருகின்றார். ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பணக்கார பெண் தொழிலதிபர்களில் இவரும் ஒருவர், இன்றைய தேதியில் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 350 கோடி அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா Vs எலான் மஸ்க்.. உலகின் மிகப்பெரிய பணக்காரர் யார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!