- Home
- Gallery
- தளபதியையே ஏங்க வைத்த அந்த அஞ்சலி யார்? கல்லூரியில் நடந்த சீக்ரெட் விஷயத்தை பப்ளிக்கா சொன்ன விஜய்யின் நண்பர்!
தளபதியையே ஏங்க வைத்த அந்த அஞ்சலி யார்? கல்லூரியில் நடந்த சீக்ரெட் விஷயத்தை பப்ளிக்கா சொன்ன விஜய்யின் நண்பர்!
தளபதி விஜய் கல்லூரி காலத்தில், அஞ்சலி என்கிற சீனியர் பெண் ஒருவரை ரசித்து... ஏங்கிய விஷயம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தளபதி விஜயுடன் சேர்ந்து லயோலா கல்லூரியில் படித்த அவரின் நண்பர்கள் பலர் சினிமாவிலும், சீரியலிலும் முன்னணி பிரபலன்களாக உள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் என்றால், நடிகர் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் தான். இவர்கள் தளபதியுடன் இணைந்து படம் நடித்தது மட்டும் இன்றி, ஸ்ரீநாத் ஒரு இயக்குனராகவும், சஞ்சீவ் சீரியல் நடிகராகவும் மிகவும் பிரபலம்.
இவர்களை ஊடகங்கள் பேட்டி எடுக்கும் போது, கண்டிப்பாக தளபதி பற்றிய கேள்வியை முன்வைத்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படி தளபதி பற்றி பலருக்கும் தெரியாத பல விஷயங்களை சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் பகிர்ந்து கொள்வது வழக்கம். சினிமா துறையை சார்ந்திடாத கல்லூரி நபர்கள் சிலரும் தளபதிக்கு உள்ளனர். அனைவரையும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது இல்லை என்றாலும், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது சந்தித்து சில் பண்ணுவது மற்றும் வீடியோ கால் மூலம் பழைய நினைவுகளை அசைபோடுவது வழக்கம்.
இந்நிலையில் தளபதியின் கல்லூரியில் அவரை ஏங்க வைத்த அஞ்சலி என்கிற சீனியர் பெண் குறித்து தான் ஸ்ரீநாத் அண்மையில் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். தளபதி உட்பட அந்த கல்லூரியில் படித்து வந்த அனைவருக்குகே அஞ்சலி என்கிற பெண்ணை மிகவும் பிடிக்குமாம். அவர் விஜய்யின் சீனியராம். ஒருமுறை ஸ்ரீநாத்தை அவர் ராகிங் செய்த போது... என்ன மட்டும் அவங்க ராகிங் செய்யவில்லை என அஞ்சலியை பார்த்து ஏக்கமாக கூறினாராம். இந்த தகவலை ஸ்ரீநாத் கூற அது சமூக வலைதளத்தில் தீயாக பரவ துவங்கிவிட்டது.
ஸ்ரீகாந்த் தளபதி விஜய் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில், விஜய்யின் நண்பனாக அறிமுகமானார். பின்னர் நம்மவர், மாண்புமிகு மாணவன், 12பி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, காதல் வைரஸ், அலை போன்ற சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சில படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய இவர், 2009 -ஆம் ஆண்டு வெளியான முத்திரை மற்றும் சந்தானம் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களை இயக்கி உள்ளார். அதே போல் காதலிக்க நேரமில்லை, பறை போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.