Vegetables : உச்சத்தில் நீடிக்கும் கேரட், அவரை விலை.! சரிந்தது தக்காளி விலை- காய்கறி விலை நிலவரம் என்ன.?
கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி விலைகள் சற்று குறைந்துள்ளன. இருப்பினும், கேரட் விலை உச்சத்தில் நீடிக்கிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது.
காய்கறிகளின் விலை என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. காய்கறி விளைச்சல் மற்றும் வரத்தைப் பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக காய்கறி விலையானது சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உச்சத்தில் நீடிக்கிறது.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
உயரும் கேரட் விலை
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
School Student: தமிழகம் முழுவதும் பறந்த முக்கிய உத்தரவு! இனி மாணவர்கள் இந்த தேர்வு எழுவது கட்டாயம்!
முள்ளங்கி விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 180 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது