- Home
- Gallery
- எந்தெந்த அணிகள் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு செல்லும்? கணித்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்!
எந்தெந்த அணிகள் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு செல்லும்? கணித்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்!
கிரிக்கெட் ஜாம்பவான்களின் கணிப்பில் அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் அணிகளில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது.

T20 World Cup 2024
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இணைந்து நடத்தும் 9ஆவது டி2 0 உலகக் கோப்பை தொடரானது ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட 20 அணிகள் இடம் பெற்ற இந்த தொடரின் முதல் போட்டி நாளை டல்லாஸில் நடைபெறுகிறது. இதில், முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன.
T20 World Cup 2024
இந்தப் போட்டி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ஸ் டி20 உலகக் கோப்பை தொடரை இலவசமாக ஒளிபரப்பு செய்கிறது. இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கயானாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது.
T20 World Cup 2024
இந்த நிலையில் தான் இந்த தொடரில் இடம் பெற்ற 20 அணிகளில் எந்தெந்த அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்துள்ளனர். இதில், அனைவரும் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் என்று கணித்துள்ளனர்.
T20 World Cup 2024
சுனில் கவாஸ்கர்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்.
அம்பத்தி ராயுடு: இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா
பிரையன் லாரா: இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்
பால் கோலிங்க் வுட்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்
கிறிஸ் மோரிஸ் – இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா
மேத்யூ ஹைடன்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
ஆரோன் பின்ச்: இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்.
முகமது கைஃப்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்
டாம் மூடி: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
ஸ்ரீசாந்த்: இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்