சூடான நீர் .. பில்டர் வாட்டர் எது நல்லது? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
Filtered water vs Boiled water : தண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். ஆனால், சிலர் சூடான நீரை குடிக்க விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ ஃபில்டர் வாட்டரை குடிக்கிறார்கள். இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை இங்கு பார்க்கலாம்.
நாம் ஆரோக்கியமாக நம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம். உணவில்லாமல் கூட நம்மால் வாழ முடியும், ஆனால் தண்ணி இல்லாமல் சில நிமிடங்கள் கூட இருக்கவே முடியாது. ஏனெனில், உடலுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், நாம் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால்தான் மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
அந்த வகையில், சிலர் தண்ணீரை சூடாக்கி அதை குடிக்க விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ ஃபில்டர் வாட்டரை குடிக்கிறார்கள். இவை இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை இப்போது நாம் இந்த கட்டுரைகள் பார்க்கலாம்.
சூடான நீர்: சூடான நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில், தண்ணீரை சூடு படுத்திக் குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண்ணுயிரிகள் இறந்துவிடும்.
அதே சமயம், சூடான நீரை குடிக்கும் போது நீரின் சுவை மற்றும் வாசனை இரண்டையும் மாற்றுகிறது. இதனால் பலர் அதை குடிக்க விரும்புவதில்லை.
இதையும் படிங்க: வெதுவெதுப்பான நீர் அல்லது குளிர்ந்த நீர் : உடல் எடையை குறைக்க எது சிறந்தது? தெரிஞ்சுக்க இதை படிங்க..
ஃபில்டர் வாட்டர்: தற்போது பல பில்டர் வாட்டரை குடிக்கின்றனர்.இன்னும் சொல்லப் போனால் இந்த நீர் சூடான நீரை விட ரொம்பவே நல்லது என்று நம்புகிறார்கள். காரணம், நீரில் இருக்கும் ரசாயன மாசுக்கள், உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற தீங்கு விளைவிக்கும் கூறுகளை வடிகட்டப்படுவதால்.
இதையும் படிங்க: சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது நல்லதா, கெட்டதா? தண்ணீர் குடிக்க சிறந்த நேரம் எது?
மேலும் இந்த நீரில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், இந்த நீரின் தரம் அதன் செயல்திறனை பொறுத்தது. எப்படியெனில், நீங்கள் பயன்படுத்தும் பில்டர் சரியாக வேலை செய்யும் வரை எந்த பிரச்சனையும் வராது.