- Home
- Gallery
- பயணிகளுக்கு குட் நியூஸ்.. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வெளியான தகவல்!
பயணிகளுக்கு குட் நியூஸ்.. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வெளியான தகவல்!
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது கட்டி முடிக்கப்படும் என்ற எதிபார்ப்பு பயணிகள் மத்தியில் இருந்து வரும் அதுதொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kalaignar Centenary Bus Terminus Kilambakkam
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கட்டப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே தற்போது இயக்கப்பபட்டு வருகின்றன.
Kilambakkam bus terminus
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக இருந்தாலும் சென்னையில் பல பகுதிகளில் இருந்து அங்கு செல்வதற்கு பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு இல்லை என பயணிகளின் தெரிவித்தனர். பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வசதியாக வண்டலூர் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புறநகர் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் சிரமம் இன்றி கிளாம்பாக்கம் செல்ல முடியும் என்பதால் பயணிகள் ரயில் நிலையம் எப்போதும் கட்டி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்து கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: School, Colleges Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. ஆகஸ்ட் 3ம் விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
Southern Railway General Manager
இந்நிலையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: அடுத்தாண்டு மார்ச் முதல் கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்லும். கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகளை தமிழக அரசு முடித்ததும் ரயில் நிலையம் கட்டும்பணி தொடங்கும் என தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த மார்ச் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று வெளியாகியுள்ள தகவல் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.