Wayanad Landslide : வயநாடு நிலச்சரிவு.! மீண்டவர்களுக்கு என்னென்ன நிவாரண பொருட்கள் உதவி தேவை.? இதோ முழு விவரம்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், இன்னும் 100க்கும் மேற்பட்டவர்களின் நிலை தெரியாமல் உள்ளது. இந்தநிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மீண்டவர்களுக்கு என்னென்ன உதவிகள், நிவராண பொருட்கள் தேவை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Wayanad Landslide
வயநாடு நிலச்சரிவு
இயற்கையின் கோர தாண்டவத்தால் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் வயநாட்டில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த ஒரு மாதங்களுக்கு மேல் கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சிறிய சிறிய நிலச்சரிவும் அவ்வப்போது ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 30ஆம் தேதி இரவு பெய்த கன மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் மிகப்பெரயி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்களை சின்னாபின்னமாக்கியது.
Wayanad Landslide rescue
மிகப்பெரிய கோரத்தாண்டவம்
முதலில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்து வெளியான தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய இயற்கை கோரதாண்டவம் என தெரியவந்தது. நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியது. பலர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். பள்ளி குழந்தைகளும் துடிக்க, துடிக்க உயிர் இழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அடையாளம் காண முடியாத உடல்கள்
தற்போது வரை உயிரிழப்புகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 357 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 200 பேரைக் காணவில்லை என கூறப்படுகிறது. மேலும் பலரது உடல்களின் பாகங்கள் தனித்தனியாக மீட்கப்பட்டுள்ளதால் 67 பேரின் உடல்களை அடையாளம் காணமுடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
wayanad disaster
நிவராண பொருட்கள்
மேலும் நிலச்சரிவில் தங்கள் சொத்துக்களை இழந்து நூலிழையில் உயிர் பிழைத்தவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே நிவாரண பொருட்களை யாரும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று தர வேண்டாம் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
OOTY TOUR : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? குட் நியூஸ் சொன்ற சுற்றுலாத்துறை- என்ன அறிவிப்பு தெரியுமா.?
Wayanad landslide
நிவாரண உதவி என்ன தேவை.?
கல்பட்டா என்ற இடத்தில் மொத்த நிவாரண பொருட்கள் வாங்கப்படுகிறது. அங்கிருந்து 18 நிவாரண மையங்களுக்கு பொருட்கள் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்வெட்டர், பிளாங்கெட், டீ சர்ட், மேலும் முக்கியதாக குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினருக்கும் உள்ளாடைகள் தேவைப்படுவதாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உள்ள தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Wayanadu collection centere
குழந்தைகளுக்கு உணவு பொருட்கள்
நிவாரண பொருட்கள் வர, வர உடனடியாக காலியாகிவிடுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கான பால் உணவான ஸ்செர்லாக் தேவை அதிகம் உள்ளதாகவும் எனவே இது போன்ற பொருட்களை அனுப்பி வைத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக இருக்கும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.