பாகிஸ்தான், இந்தியாவை தோற்கடித்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா?
பாகிஸ்தான் இன்று விளையாடும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.

IND vs PAK, T20 World Cup 2024
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதுவரையில் இந்தியா விளையாடிய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று பாகிஸ்தான் விளையாடிய ஒரு போட்டியில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
IND vs PAK, T20 World Cup 2024
இதுவரையில் இரு அணிகளும் மோதிய 7 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அமெரிக்கா 2 போட்டிகளில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
IND vs PAK, T20 World Cup 2024
இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளது. கனடா விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் விளையாடிய ஒரு போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
IND vs PAK, T20 World Cup 2024
இதே போன்று அயர்லாந்து விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 2 போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட அயர்லாந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs PAK, T20 World Cup 2024
இன்று நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாகும். ஆனால், பாகிஸ்தான் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும். நெட் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் 0 புள்ளிகள் பெற்றுள்ளது.
IND vs PAK, T20 World Cup 2024
அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்து இடங்களை பிடித்தால் நெட்ரன் ரேட் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
IND vs PAK, T20 World Cup 2024
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் 2ஆவது இடம் பிடிக்கும். இதே போன்று அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றால் இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.