Vegetables Price : தக்காளி விலை என்ன.? கோயம்பேட்டில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.?
காய்கறிகளின் விலை ஏறி இறங்கி வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
தக்காளி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 35 முதல் 45 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Power Shutdown in Chennai: அட கடவுளே! இன்னைக்குனு பார்த்து முக்கிய இடங்களில் எல்லாம் மின்தடை?
பட்டர் பீன்ஸ் விலை என்ன.?
வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முருங்கைக்காய் விலை என்ன.?
காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் விலை என்ன.?
இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 160 க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.