HBD CHENNAI : நம்ம சென்னை சான்சே இல்ல... சுற்றிபார்க்க கூடிய டாப் 10 இடங்கள் என்ன தெரியுமா.?
வந்தோரை வாழவைக்கும் சென்னை, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் முதல் கோயில்கள் வரை பல்வேறு சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. மெரினா கடற்கரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மகாபலிபுரம், சாந்தோம் தேவாலயம், ஸ்ரீ பார்த்தசாரதி கோவில் என பல இடங்கள் உங்களை வியக்க வைக்கும்.
சென்னை தனது 385வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், வந்தோரை வாழவைக்கும் சென்னையில் பல முக்கிய சுற்றுலா தளங்கள் பல வெளிநாட்டினரையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் சுற்றிப்பார்க்க கூடிய முக்கிய இடங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
சென்னை மெரினா கடற்கரை
சென்னையின் முக்கிய அடையாளமாக திகழ்வது மெரினா கடற்கரையாகும், இங்கு பரந்து விரிந்து காணப்படும் மெரினா கடற்கைரை மணல்களில் விளையாட நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பல தலைவர்களின் கம்பீர உருவசிலையும், முன்னாள் முதலமைச்சர்க்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களும் அமைந்துள்ளது. இது மட்டுமில்லாமல் மீனவர்களின் அடையாளங்களாக திகழும் பழமையான கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
தற்போது தலைமை செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத்தாகும், 1640 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் கோட்டை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஆகும். 150 அடி உயரம் கொண்ட கோட்டை கொத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்கள், வரலாற்று முகப்புகளை விரும்புபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.
மகாபலிபுரம்
சென்னையின் அருகில் உள்ள சுற்றுலா தளமான மகாபலிபுரம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது. பல்லவ வம்சத்தால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை நினைவு சின்னமாக உள்ளது. மகாபலிபுரத்தில் உலக பாரம்பரிய தளமான கடற்கரை கோயில், பஞ்ச ரதங்கள், கங்கையின் ஆலம்பாறை கோட்டை, புலி குகை, மகாபலிபுரம் கடற்கரை என பல சுற்றி பார்க்கும் இடங்கள் உள்ளது.
சாந்தோம் தேவாலயம்
சென்னையில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்று சாந்தோம் தேவாலயம், கிறிஸ்தவர்கள் வழிபடும் புனித இடமான இந்த தேவாலயம் சென்னை வாழ் மக்கள் பலருக்கும் ரொம்பவே அறிமுகமான இடமாகும். இந்த தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனைகள் , கிறிஸ்துமஸ் மற்றும் வருடப் பிறப்பு போன்ற கிறிஸ்தவர்களின் பல முக்கிய விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
ஸ்ரீ பார்த்தசாரதி கோவில்
சென்னையில் உள்ள மிகப் பழமையான கோவில்களில் முக்கியமானது ஸ்ரீ பார்த்தசாரதி கோவில், 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் வெங்கட் கிருஷ்ணர் சன்னதியாக நிறுவப்பட்டது. இந்த கோயில் திருவல்லிக்கேணியில் அமைக்கப்பட்டுள்ளது. கலைநயத்துடன் செதுக்கப்பட்ட பிரமிடு வடிவ - ராஜ கோபுரம் அல்லது குவிமாடங்கள், ஒன்று கிழக்கு மற்றும் மேற்கு திசையில், இந்த கோவிலின் முக்கிய சிறப்பம்மாகும்.
கிண்டி தேசிய பூங்கா:
இயந்திர வேகத்திற்கு ஈடாக ஓடிக்கொண்டிருக்கும் சென்னையில் முக்கிய பகுதியில் உள்ள இடம் தான் கிண்டி தேசிய பூங்கா. கிண்டி பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்கா, 1959ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் முதலைகள், மான்கள், அரிய வகை குரங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. முக்கிய அம்சமாக பாம்பு பண்ணையும் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்கவைக்கிறது. இது மட்டுமில்லாமல் சிறுவர்களை ஈர்க்கும் விளாயாட்டு மையங்களும் உள்ளது.
சென்னை எழும்பூர் அருங்காட்சியகம்
சென்னையின் மற்றொரு அடையாளமாக இருப்பது சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இந்த அருங்காட்சியகம் 1851ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மிகவும் பழமையான இந்த அருங்காட்சியகத்தில் பலவித கலைநயமிக்க பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. 16 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே பழங்கால உலோகவியல், நாணயவியல் மற்றும் ரசாயன பாதுகாப்பு காட்சியகங்கள் ஆகியன பொதுமக்களை கவர்கின்றன. யானையின் எலும்புகூடு, நீல திமிங்கலத்தின் எலும்புக்கூடு உள்ளிட்டவை பார்வையாளர்களை மிகவும் வியக்கவைக்கும் வகையில் அமைத்துள்ளது.
சென்னையில் நவீன யுகத்திற்கு ஏற்ப மாறிவரும் இந்த காலத்தில் முக்கியமாக பல வணிக வளாகம் பல அமைந்துள்ளது. அந்த வகையில் ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ் பிரஸ் அவென்யூ, அண்ணாநகர் பகுதியில் உள்ள வி ஆர் மால், வடபழனியில் உள்ள போரம் மால் என பல வகையான வணிக வளாகம் சுற்றி பார்க்க சிறந்த இடமாக உள்ளது.