கத்துக்குட்டி அணியிடம் போராடிய வெஸ்ட் இண்டீஸ் – 19ஆவது ஓவரில் 137 ரன்கள் எடுத்து வெற்றி!
பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

West Indies vs Papua New Guinea, 2nd Match
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 2ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பவல் பவுலிங் தேர்வு செய்தார்.
West Indies vs Papua New Guinea, 2nd Match
அதன்படி முதலில் விளையாடிய பப்புவா நியூ கினி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக சேசே பவு 50 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். கிப்லின் தோரிகா 27 ரன்கள் எடுத்தார். பின்னர், எளிய இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். நிக்கோலஸ் பூரன் 27 ரன்னில் வெளியேற, பிராண்டன் கிங் 34 ரன்கள் எடுத்தார்.
West Indies vs Papua New Guinea, 2nd Match
கேப்டன் ரோவ்மன் பவல் 15 ரன்னும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ரோஸ்டன் சேஸ் 42 ரன்னும், ஆண்ட்ரே ரஸல் 15 ரன்னும் எடுத்துக் கொடுக்கவே வெஸ்ட் இண்டீஸ் அணியானது 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
West Indies vs Papua New Guinea, 2nd Match
பப்புவா நியூ கினி அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் அசாட் வாலா 2 விக்கெட்டும், ஜான் கரிகோ 1 விக்கெட்டும், சாட் சோபெர் மற்றும் அலேய் நோவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
West Indies vs Papua New Guinea, 2nd Match,
இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 9 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியானது, உகாண்டாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி 9ஆம் தேதி காலை 6 மணிக்கு கயானாவில் நடைபெறுகிறது.
இதே போன்று இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த பப்புவா நியூ கினி அணியானது, வரும் 6ஆம் தேதி உகாண்டா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது, கயானாவில் நடைபெறுகிறது.