தொங்கும் தொப்பை சட்டுனு கரைய.. தினமும் இவற்றை ஊற வைத்து.. காலையில சாப்பிடுங்க!!
Foods For Belly Fat Loss : இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை கரைக்க, சில உணவுகளை ஊற வைத்து சாப்பிட்டால், அதன் விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமாக இருந்தால், இதயத்தின் ஆரோக்கியம் உட்பட்ட நமது உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அந்த வகையில் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை கரைக்க பல முயற்சிகள் எடுத்தும் எந்த பயனும் கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.
ஆனால், சில உணவுகள் மூலம் அவற்றை சுலபமாக குறைக்கலாம். ஆனால், அந்த உணவுகளை சாப்பிட வேண்டுமானால், அவற்றை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் பலன்களை முழுமையாக பெற முடியும்.
சியா விதைகள் : சியா விதைகளை தண்ணீரிலோ அல்லது வேறு ஆரோக்கியமான திரவங்களிலோ ஊறவைத்து சாப்பிட்டால் செரிமானத்தை எளிதாக்கும். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது நம்மை நாள் முழுவதும் வயிற்றை நிரப்பி வைத்திருப்பது மட்டுமின்றி, இடுப்பில் உள்ள கொழுப்பையும் எளிதாக கரைத்து விடும்.
ஆளி விதைகள் : இந்த விதையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், செரிமானம் பிரச்சனை நீங்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். இதில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அதிகம் இருப்பதால், அவை நிறைவாக வைத்திருக்கும் மற்றும் எடையை பராமரிக்க உதவும்.
பாதாம் : பாதாமில் புரதம் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை இரவில் ஊற வைத்து, மறுநாள் காலை சாப்பிட்டு வந்தால் நம்மை நிறைவாக உணர வைப்பதுமட்டுமின்றி, எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆனால், இதை அளவோடு தான் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஓட்ஸ் : கோட்சை இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சத்துக்களின் அளவு அதிகரிக்கும் மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கார்போஹைட்ரேட் மெதுவாக்கி, உடலுக்கு தேவையான ஆற்றலையும், உயிர் சக்தியையும் அளிக்கிறது மற்றும் பசியையும் கட்டுப்படுத்துகிறது.