- Home
- Gallery
- Weekend Special Buses: வீக் எண்டுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா! கவலை வேண்டாம்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!
Weekend Special Buses: வீக் எண்டுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா! கவலை வேண்டாம்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கபட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Transport Department
இது தொடர்பாக அரசு விரைவுக் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 265 பேருந்துகளும், 29ம் தேதி (சனிக்கிழமை) 320 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Weekend Special Buses
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28ம் தேதியன்று 65 பேருந்துகளும் 29ம் தேதி 65 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Government Buses
மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 28ம் தேதியன்று 15 பேருந்துகளும் 29ம் தேதி 15 பேருந்துகளும் ஆக 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
Kilambakkam CMBT
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 4,234 பயணிகளும் சனிக்கிழமை 1,930 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 4,179 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.