"நாங்களும் தோள்கொடுப்போம்" கேரளாவிற்காக களமிறங்கும் டோலிவுட் ஹீரோஸ் - 1 கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்த ராம் சரண்!
Ram Charan : கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
wayanad
கடந்த செவ்வாய்க்கிழமை கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளது, இந்தியாவையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில் கேரள அரசுக்கு உதவ, தமிழக அரசு மட்டுமல்லாமல் கோலிவுட் மற்றும் மோலிவுட் நடிகர்களும் களம் இறங்கியுள்ளனர்.
தியேட்டர்ல கதறவிட்டது பத்தாதுனு இப்போ ஓடிடில வேறயா! இந்தியன் 2 படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
kamal
உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக், நடிகர் துல்கர் சல்மான், பாஹத் பாசில், மம்மூட்டி, நடிகைகள் ஜோதிகா, ராஸ்மிகா மந்தானா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பலரும் லட்சக்கணக்கான ரூபாய்களை நிவாரண நிதியாக அளித்துள்ளனர்.
Mohanlal
இந்நிலையில் நேற்று முன்தினம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினை நேரில் சென்று பார்வையிட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சுமார் ஒரு கோடி ரூபாயை கேரளா அரசின் பொது நிதிக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Allu Arjun
இதனையடுத்து கேரளாவிற்காக தற்பொழுது தெலுங்கு திரையுலகமும் களமிறங்கி உள்ளது. பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் சுமார் ஒரு கோடி ரூபாயை கேரளா முதல்வர் பொது நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். முன்னதாக பிரபல நடிகை அல்லு அர்ஜுன், 25 லட்சம் ரூபாய் கேரளாவிற்கு நிவாரண நிதியாக வழங்கியது அனைவரும் அறிந்ததே.