Mettur Dam : ஒரே நாளில் கிடு கிடுவென குறைந்த நீர் வரத்து.! மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இவ்வளவுதானா.?
மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 லட்சம் கன அடி அளவிற்கு நீர் வரத்து இருந்த நிலையில், தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு 24ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.
காவிரி ஆறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. காவிரியை நம்பியே பல மாவட்ட விவசாயிகள் உள்ளனர். கர்நாடகவில் உருவாகம் காவிரி பல மாவட்டங்களை கடந்த தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்திற்கு வரும் காவிரி ஆற்றை சேமித்து வைக்கும் பொக்கிஷமாக மேட்டூர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஆண்டு தோறும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
இந்தாண்டு மேட்டூர் அணையில் நீர் மட்டம் வெகுவாக சரிந்த காரணத்தால் தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவானது. இதனையடுத்து கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் கர்நாடகா அரசோ தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய நீரை தர மறுத்தத்து. இதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 8ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்கப்படும் என கூறியது. ஆனால் கர்நாடகவில் வலுப்பெற்ற பருவமழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பியது. கேஆர்எஸ் மற்றும் கபினி அணை முழுவதுமாக நிரம்பிய நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மீட்டமும் 10 நாட்களில் கிடு,கிடுவென உயர்ந்தது.
mettur dam full third time
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் அணைக்கு வந்த உபரி நீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் முக்கொம்பிற்கு நீர் வரத்து அதிகரித்தது. கடைமடை வரை தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இந்தநிலையில் கர்நாடக மற்றும் கேரளாவில் மழை குறைந்துள்ளதால் நீர் வரத்து குறைந்்துள்ளது. கர்நாடகா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர் வரத்து 60ஆயிரம் கன அடியில் இருந்து 24ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.
Mettur dam full 12 dist warning
இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 15நாட்களுக்கு பிறகு பிலிகுண்டுலுவில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் 22ஆயிரம் கன அடியாக உள்ளது.