ஜாக்கெட் போடாமல் சேலை கட்டி.. பாரதிராஜா பட ஹீரோயின் லுக்கில் போஸ் கொடுத்த அஞ்சனாவின் நவராத்ரி ஸ்பெஷல் கிளிக்ஸ்
நவராத்திரிக்காக ஜாக்கெட் போடாமல் பர்பிள் நிற சேலை மட்டும் உடுத்தி விஜே அஞ்சனா நடத்திய வித்தியாசமான போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
anjana
சன் மியூசிக்கில் விஜே-வாக பணியாற்றியவர் அஞ்சனா ரங்கன். அதில் மணிமேகலையுடன் அஞ்சனா ஜோடியாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பிரபலமானதை அடுத்து இருவருமே அடுத்தகட்டமாக ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்க தொடங்கினர். மணிமேகலை விஜய் டிவியில் செட்டில் ஆக, அஞ்சனா ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
VJ anjana
இதுதவிர திரைப்படங்களின் ஆடியோ லாஞ்ச், டிரைலர் லாஞ்ச் போன்றவற்றிற்கும் அஞ்சனா தான் தொகுப்பாளினியாக உள்ளார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் ஆனது. நடிகர் கயல் சந்திரன் என்பவரை காதலித்து கரம் பிடித்தார் அஞ்சனா. சந்திரன், பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ஆவார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
anjana rangan
தொகுப்பாளினியாக பிசியாக இருக்கும் அஞ்சனா, வித விதமாக போட்டோஷூட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது நவராத்திரி கொண்டாடப்பட்டு வருவதால், அதன் 9 நாட்களுக்கு 9 நிற உடைகளில் போட்டோஷூட் நடத்த முடிவெடுத்த அஞ்சனா, தினசரி ஒரு நிறத்தில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
VJ anjana navaratri photoshoot
அந்த வகையில் நவராத்திரி தினத்தின் 8-வது தினமான நேற்று ஜாக்கெட் அணியாமல் பர்ப்பிள் நிற சேலையில் விஜே அஞ்சனா நடத்திய போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போயினர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அஞ்சனாவை இந்த கெட் அப்பில் பார்ப்பதற்கு பொன்னியின் செல்வனில் வரும் குந்தவை போல மிகவும் அழகாக இருப்பதாக வர்ணித்து வருகின்றன. ஒரு சிலரோ பாரதிராஜா பட ஹீரோயின் போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸில் ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு எண்ட்ரி... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கமல் - யார்... யார் தெரியுமா?