- Home
- Gallery
- விராட் கோலியின் ஜிம் டிரைனருக்கு சம்பளம் ரூ.4.5 லட்சமாம்: ரோகித் சர்மா, பாண்டியா எவ்வளவு கொடுக்குறாங்க?
விராட் கோலியின் ஜிம் டிரைனருக்கு சம்பளம் ரூ.4.5 லட்சமாம்: ரோகித் சர்மா, பாண்டியா எவ்வளவு கொடுக்குறாங்க?
விராட் கோலி தனது ஜிம் டிரைனருக்கு வருடத்திற்கு ரூ.4.5 லட்சம் வரையில் சம்பளம் கொடுப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

MS Dhoni
பொதுவாகவே விளையாட்டு வீரர்கள் என்றாலே 100 சதைகிதம் உடல் வலிமையுடன் இருக்க வேண்டும். இது கால்பந்து, வாலிபால், டென்னிஸ், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், கபடி, கோ கோ என்று வரிசையாக எல்லா வகையான விளையாட்டுக்களுக்கும் பொருந்தும்.
Hardik Pandya
தங்களது உடலை மெருகேற்றுவதில் விளையாட்டு வீரர்கள் அதிக அக்கறை காட்டுவார்கள். இதற்காக சிலர் வீடுகளையே ஜிம் பயிற்சி கூடாரமாகக் கூட மாற்றியிருப்பார்கள்.
Arshdeep Singh
மேலும், சில ஜிம் டிரைனர் உதவியுடன் தங்களது உடலை 100 சதவிகிதம் ஃபிட்டாக வைத்திருப்பார்கள். டயட் ஃபாலோ பண்ணுவது முதல் அதிகளவில் மெனக்கெடுவார்கள். அவர்களில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங், ரிஷப் பண்ட், ஷிவம் துபே என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
Hardik Pandya Gym Trainer Name
ஹர்திக் பாண்டியா:
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வலம் வந்த ஹர்திக் பாண்டியாவின் ஜிம் டிரைனர் அலெக்சாண்டர் அலெக்ஸ் இலிச். இவருடன் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியா வலம் வந்திருக்கிறார். ஹர்திக் பாண்டியாவிற்கு மட்டுமின்றி அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சிற்கும் அவர் தான் டிரைனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rohit Sharma Gym Trainer Name
ரோகித் சர்மா:
இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை டிராபியை இந்திய அணிக்கும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கும் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்த தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்துள்ளது. ரோகித் சர்மாவின் ஃபிட்னஸ் ரகசியத்திற்கு காரணமான ஜிம் பயிற்சியாளர் பற்றி எந்த விவரமும் இல்லை என்றாலும், அவரது பயிற்சியாளரது அங்கித் காலியாரின் ஆலோசனைப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.
Virat Kohli Gym Trainer Name
ஜிம் டிரைனர்களும், கிரிக்கெட் வீரர்களும்:
உடற்தகுதிக்கான விராட் கோலியின் அர்ப்பணிப்பு என்பது அதிக புகழ்பெற்றது. உலகளவில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். உடற்தகுதிக்கு விராட் கோலியின் அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. எனினும், ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கு பின்னால் ஒரு ஜிம் டிரைனர் என்று ஒருவர் இருக்கிறார்.
MS Dhoni
அந்த வகையில் விராட் கோலியின் ஜிம் பயிற்சிக்கு பின்னால் இருப்பது பாசு சங்கர். இவருக்கு வருடத்திற்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையில் விராட் கோலி சம்பளமாக கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
AT Rajamani Prabhu Gym Trainer
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களுக்கும் ராஜாமணி பிரபு தான் ஜிம் டிரைனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யுஸ்வேந்திர சாகல், துருவ் ஜூரெல், ரியான் பராக், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா ஆகியோர் உள்பட பலருக்கும் ஜிம் டிரைனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.