ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்த முதல் வீரராக விராட் கோலி சாதனை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 எலிமினேட்டர் போட்டியில் விராட் கோலி 29 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் 8000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator
ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியின் போது விராட் கோலி 29 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 4ஆவது அணியாக ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடி வருகிறது.
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி விராட் கோலி மற்றும் ஃபாப் டூ பிளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator
இதில் முதல் சில ஓவர்களில் தடுமாறிய ஃபாப் கடைசியில் 17 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கேமரூன் க்ரீன் களமிறங்கினார். இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன் பிறகு சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்த விராட் கோலி 29 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator
முதல் வீரராக இந்த மைல்கல்லை எட்டியவர்கள்:
1000 ரன்கள் – ஆடம் கில்கிறிஸ்ட்
2000 ரன்கள் – சுரேஷ் ரெய்னா
3000 ரன்கள் – சுரேஷ் ரெய்னா
4000 ரன்கள் – விராட் கோலி
5000 ரன்கள் – சுரேஷ் ரெய்னா
6000 ரன்கள் – விராட் கோலி
7000 ரன்கள் - விராட் கோலி
8000 ரன்கள் - விராட் கோலி
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த கோலி, அதன் பிறகு 6000, 7000 மற்றும் 8000 ரன்களை கடந்த முதல் வீரராக அடுத்தடுத்து சாதனை படைத்துள்ளார்.
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator
இதுவரையில் 251 போட்டிகளில் விளையாடியிருந்த கோலி 55 அரைசதங்கள், 8 சதங்கள் உள்பட மொத்தமாக 7971 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில், எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடி 29 ரன்கள் எடுத்து 8000 ரன்களை கடந்துள்ளார். கடைசியில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, Eliminator
இந்த சீசனில் மொத்தமாக 15 போட்டிகள் (இன்றைய போட்டி உள்பட) விளையாடி 5 அரைசதங்கள், ஒரு சதம் உள்பட மொத்தமாக 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தியிருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றால் 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாடும். இல்லையென்றால் இந்த போட்டியோடு வெளியேறும்.