- Home
- Gallery
- Top 10 Serial TRP: சிங்கப்பெண்ணே சீரியலையே தடாலடியாக பின்னுக்கு தள்ளிய சிறகடிக்க ஆசை! டாப் 10 TRP விவரம்!
Top 10 Serial TRP: சிங்கப்பெண்ணே சீரியலையே தடாலடியாக பின்னுக்கு தள்ளிய சிறகடிக்க ஆசை! டாப் 10 TRP விவரம்!
இந்த வருடத்தின் 27-ஆவது வாரத்தில், அர்பன் மற்றும் ரூரல் தரவரிசை பட்டியலில் TRP-யில் டாப் 10 இடங்களை கைப்பற்றிய சீரியல்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

serial TRP
திரைப்படங்களை விட, சீரியல்கள் தான் இல்லத்தரசிகள் மத்தியில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக பெண்களுக்கு நிகராக ஆண்களும், இளவட்ட ரசிகர்களும் கூட சீரியல்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். எனவே சீரியல்களை புதிய கோணத்தில் கொண்டு செல்வதில் நிறைய போட்டிகள் தொலைக்காட்சிகளுக்கு இடையே நடந்து வருகிறது.
serial TRP
மற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட, சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தான் மவுசு அதிகம். எனவே எப்போதும் சன் டிவி தொடர்கள் தான் TRP-யில் முதலிடத்தை பிடிப்பது வழக்கம். அதை தான் நாமும் பார்த்து வருகிறோம். ஆனால் இதுவரை முதலிடத்தை பிடித்து வந்த, சிங்கப்பெண்ணே சீரியலை இரண்டாவது இடத்திற்கு தள்ளி மளமளவென முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' தொடர்.
கடந்த வாரம் முழுவதும் பாட்டியின் பிறந்தநாளை கொண்டாட்டம், மனோஜ் மீனாவின் நகையை விற்று விட்டதால் வந்த பிரச்சனை, 4 லட்சம் பொருட்களை பறிகொடுத்தது என எதிர்பார்த்த திருப்பங்களுடனும் , ட்விஸ்ட்டுடனும் ஒளிபரப்பானது. இதுவே இந்த சீரியல் முதலிடத்திற்கு வர காரணம் என கூறப்படுகிறது. சிறகடிக்க ஆசை சீரியலின் TRP-க்கு ஆப்பு வைக்க, சிங்க பெண்ணே சீரியலின் நேரத்தை மாற்றியது சன் டிவி. ஆனால் இந்த மாற்றம் சன் டிவி சீரியலின் TRP-க்கே உலை வைத்துவிட்டது.
Singapenne Serial
அதன்படி இந்த வாரம் 'சிறகடிக்க ஆசை சீரியல்' 8.38 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து, தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டிருந்த 'சிங்கப் பெண்ணே' சீரியல் 8.27 TRP புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில், 8.08 TRP புள்ளிகளுடன் காதல் செண்டிமெண்ட் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டோடு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் பிடித்துள்ளது.
நான்காவது இடத்தில், கடந்த மாதம் துவங்கப்பட்ட 'மருமகள்' சீரியல் தான் உள்ளது. இந்த தொடர் 7.58 TRP புள்ளிகளை பெற்றுள்ளது. ஐந்தாவது இடத்தில் பாசமலர் படத்தையே மிஞ்சும் வகையில் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் 'வானதைப்போல' தொடர் உள்ளது. இந்த சீரியல் 7.50 TRP புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. ஆறாவது இடத்தில் விஜய் டிவியின் முக்கிய தொடரான பாக்கியலட்சுமி சீரியல் 7.12 TRP புள்ளிகளை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து, மல்லி சீரியல் 6.80 TRP புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தையும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 6.77 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளது. சன் டிவியில் டாப் 5 இடங்களுக்குள் இடம்பிடித்து வந்த சுந்தரி சீரியல் 6.49 TRP புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி இடத்தை பிடித்துள்ளது விஜய் டிவியில் சமீபத்தில் துவங்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல்.