- Home
- Gallery
- குழந்தை பிறந்த 4 மாதத்தில்... புது வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் நடத்திய சீரியல் நடிகை காயத்திரி யுவராஜ்! போட்டோஸ்
குழந்தை பிறந்த 4 மாதத்தில்... புது வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் நடத்திய சீரியல் நடிகை காயத்திரி யுவராஜ்! போட்டோஸ்
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற பல முன்னணி தொலைக்காட்சிகளில்... ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள காயத்ரி யுவராஜ், தன்னுடைய புதிய வீட்டின் கிரஹப்ரவேசத்தை நடத்தியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வெளியாகி, வைரலாகி வருகிறது.

சென்னையில் பிறந்து வளர்த்தவர் தான் காயத்ரி. சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் இருந்ததால்... கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சீரியல் வாய்ப்புகளை தேடி வந்தார்.
மேலும் நடிப்புக்காக டான்ஸ் பயிற்சி பெற்று வந்த காயத்திற்கு, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் காயத்ரியுடன் இணைந்து நடனமாடியவர் தான் யுவராஜ்.
தேர்வுக்கு படிக்காமல் முத்த வீடியோ.. அலப்பறை செய்த மாணவிகள்! விஜய் தேவரகொண்டா கொடுத்த வாக்குறுதி!
இந்த நிகழ்ச்சியில் இணைந்து டான்ஸ் ஆடியபோது, இவருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இருவருமே தங்களில் கேரியரில் கவனம் செலுத்தி வந்தாலும்... தங்களுடைய வளர்ச்சிக்கு திருமணம் ஒரு தடை இல்லை என்பதை புரிந்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு முன்பு தென்றல் சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த, காயத்திரி... திருமணத்திற்கு பிறகு தான் பல சீரியல்களில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
விதியை மீறி தீனா போட்ட திட்டம்.. மிரள விட்ட இளையராஜா! புதிய தலைவரானார் சபேசன்..!
குறிப்பாக ஒரு ஆண் குழந்தையை பெற்ற பிறகும்.. சில சீரியல்களில் கதாநாயகிக்கு நிகரான வேடங்களில் நடித்து வந்தார். குடும்பம் குழந்தை என இரண்டையும், பேலன்ஸாக பார்த்து கொண்டு பலரையும் பொறாமை கொள்ளவைத்தார்.
இதுவரை 10க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள காயத்ரிக்கு, கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார். கர்ப்பமாக இருப்பதால், 6 மாதத்திற்கு மேல் நடிப்பது மிகவும் சிரமமாக இருந்ததால் சீரியலில் இருந்தும் விலகினார்.
அப்படி போடு.! தளபதி விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி!
இதை தொடர்ந்து, நவம்பர் மாதம் தன்னுடைய பிறந்தநாளான நவம்பர் 16-ஆம் தேதி அன்று, காயத்திற்கு அழகிய பெண் குழந்தை பிரிந்தது. இந்த தகவலை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.
அவ்வப்போது, தன்னுடைய குழந்தை மற்றும் தன்னுடைய புகைப்படங்கள் வெளியிட்டு, சந்தோஷமான நிகழ்வுகள் குறித்து அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ள காயத்ரி - யுவராஜ் ஜோடி தற்போது புதிய வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, தன்னுடைய குழந்தை யுகா பிரிந்த 4 மாதத்திலேயே காயத்ரி தற்போது புதிய வீடு கட்டி, குடியேறியுள்ளதற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் காயத்ரி - யுவராஜ் ஜோடிக்கு 14 வயதில் தருண் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். யுவராஜ் டான்ஸ் கிளாஸ் ஒன்றை நடத்தி வரும் நிலையில், காயத்ரி சீரியலில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார். அதே போல் பல்வேறு வீடியோக்களை யூடியுப்பில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.