- Home
- Gallery
- காரால் வந்த பிரச்சனை.! விஜய் டிவி சீரியல் நடிகர் மகனை கடத்தி சரமாரியாக தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு!
காரால் வந்த பிரச்சனை.! விஜய் டிவி சீரியல் நடிகர் மகனை கடத்தி சரமாரியாக தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு!
சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிர்லா போஸின் மகனை கடத்தி சென்று சிலர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நேரங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் சம்பவங்களையே, மிஞ்சும் வகையில் வகையில் நிஜ வாழ்க்கையில் நடக்கிறது. அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடித்த, 'பார்க்கிங்' பட பாணியில் காரால் வந்த பிரச்சனை விபரீதமாக மாறி கடத்தல் வரை சென்றுள்ள சம்பம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏராளமான சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் பிர்லா போஸ். சன் டிவியில் ஒளிபரப்பான 'திருமதி செல்வம்', 'கல்யாண பரிசு', 'கோலங்கள்', 'தமிழ் கடவுள் முருகன்', எங்கவீட்டு பெண்' உள்ளிட்ட ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'தங்கமகள்' என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார்.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் 'வேட்டையன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு... தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர்... பிர்லா போஸில் காரை இடித்துவிட்டதால், கோவத்தில் அவர் சத்தம் போட்டதாக தெரிகிறது.
அந்த இளைஞரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்ததால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இந்த பிரச்சனையால் அந்த இளைஞர்... பிர்லா போஸை பழிவாங்க, அவரின் மகனை கடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான நேரம் பார்த்து கார்த்திருந்தவர், பிர்லா போஸ் 'வேட்டையன்' படப்பிடிப்புக்காக வெளியூருக்கு சென்றபோது... அவரின் மகனை கடத்தி சென்று, 10 பேர் கொண்ட கும்பலுடன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
Rajinikanth: ஆனந்த் - ராதிகா ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குறித்து.. ரஜினிகாந்த் கூறியது என்ன தெரியுமா?
பின்னர் பிர்லா போஸ் மகனை சந்தேகம் வராத வண்ணம் வீட்டிலேயே இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து, மகனை பார்க்க அடித்து பிடித்து வந்த பிர்லா போஸிடம்... மருத்துவர்கள் உங்கள் மகனுக்கு வெளிக்காயங்களை விட உள்காயம் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர். இதை தொடர்ந்து தற்போது பிர்லா போஸ், மேலும் தன்னுடைய மகளை கீழ் வீட்டில் வசிக்கும் இளைஞர் தான் கடத்தி இப்படி செய்தது தெரியவந்தது. எனவே அவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. காரில் இடித்தால் ஏற்பட்ட பிரச்சனை இந்த அளவுக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.