- Home
- Gallery
- யூ டியூபர் இர்ஃபான் மனைவிக்கு ஜாம் ஜாம்முன்னு நடந்த வளைகாப்பு! கிலோ கணக்கில் நகைகளோடு ஜொலித்த ஆசிபா!
யூ டியூபர் இர்ஃபான் மனைவிக்கு ஜாம் ஜாம்முன்னு நடந்த வளைகாப்பு! கிலோ கணக்கில் நகைகளோடு ஜொலித்த ஆசிபா!
பிரபல யூ டியூப் பிரபலமும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள, இர்ஃபானின் மனைவி ஆசிபாவுக்கு வளைகாப்பு நடந்துள்ள தகவலை, தற்போது புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார் இர்ஃபான்.

Youtuber Irfan
சமீப காலமாக, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களுக்கு நிகராக யூ டியூப் பிரபலங்களுக்கும் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் யூ டியூப் தளத்தில் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் விதவிதமான உணவுகள் பற்றி விமர்சனம் செய்து, மிகவும் பிரபலமானவர் இர்பான். இவருக்கு யூ டியூபில் கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் அதிகமான சாப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். அதேபோல் ட்விட்டர், instagram, போன்ற சமூக வலைதளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
யூ டியூப் மூலம் ஒவ்வொரு மாதமும் பல லட்சம் கல்லா கட்டி வரும் இர்ஃபான், கடந்த ஆண்டு மே மாதம் ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் பார்த்து முடிவு செய்த இவரது திருமணம், மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான யூ டியூப் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
திருமணம் ஆன சில தினங்களிலேயே ஒரு பெண் மீது, இர்ஃபானின் கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இர்ஃபான், பின்னர் அது குறித்த விளக்கம் ஒன்றையும் கொடுத்தார். இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றும், தன்னை பற்றி மிகவும் அவதூறான தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியாவது வேதனையாக இருப்பதாகவும், தெரிவித்தார். மேலும் இதுகுறித்த வழக்கும், விசாரணையும் நடந்து வருவதாகவும், விபத்தில் சிக்கிய பெண்ணின் குடும்பத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை நான் செய்வேன் என உறுதியளித்தார்.
Irfan
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார் இர்ஃபான். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மனைவியுடன் துபாய் சென்றபோது... அங்கு கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் உள்ள சிசு ஆனா? பெண்ணா? என்பதை ஸ்கேன் செய்து தெரிந்துகொண்டார்.
irfan
இதனையே வைத்து வீடியோ ஒன்றையும் இர்ஃபான் வெளியிட்ட நிலையில், இதற்கு சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. மருத்துவ கவுன்சில் இர்ஃபான் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலர் கூறிய நிலையில், இதற்கான நோட்டீசும் இவருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட இர்ஃபான் மன்னிப்பு கோரியது மட்டும் இன்றி, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது இர்ஃபான் மனைவி ஆசிபா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், இர்ஃபான் தன்னுடைய மனைவிக்கு மிக பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இர்ஃபான் மனைவி கழுத்தில் கிலோ கணக்கில் தங்க நகைகளோடு ஜொலிக்கிறார் அதை நீங்களே பாருங்கள்.