- Home
- Gallery
- முடியும் நேரத்தில் டிஆர்பி-யில் தூள் கிளப்பும் எதிர்நீச்சல் - இந்த வார டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் இதோ
முடியும் நேரத்தில் டிஆர்பி-யில் தூள் கிளப்பும் எதிர்நீச்சல் - இந்த வார டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் இதோ
சன் டிவி சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Serial TRP
சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் மவுசு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சீரியல்களுக்கு கிடைக்கும் டிஆர்பி டேட்டிங்கை வைத்து தான் அதன் முன்னணி நிலவரம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 22-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் சன் டிவி சீரியல்களுக்கு போட்டியாக 4 விஜய் டிவி சீரியல்களும் மாஸான டிஆர்பி ரேட்டிங்கை பெற்று இருக்கிறது. அதன் முழு பட்டியலை பார்க்கலாம்.
Top 10 Tamil Serial
டிஆர்பி பட்டியலில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் மற்றும் சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி ஆகிய சீரியல்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக 10வது இடத்தில் உள்ள ஆஹா கல்யாணம் சீரியலுக்கு 6.19 டிஆர்பி புள்ளிகளும், 9ம் இடத்தில் உள்ள சுந்தரி சீரியலுக்கு 6.62 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக சன் டிவியின் மல்லி சீரியலுக்கு 8ம் இடம் கிடைத்துள்ளது. அதற்கு 6.86 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்... அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்ன பிரபலத்தை பழிவாங்கிட்டேன்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கூறிய ஷாக்கிங் தகவல்!
Week 22 Serial TRP
கடந்த வாரம் 8-ம் இடம்பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 7.10 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தை காட்டிலும் ஒரு இடம் முன்னேறி 7.43 டிஆர்பி புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. அதேபோல் கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த வானத்தைப் போல சீரியல், இந்த வாரம் 7.85 புள்ளிகளுடன் 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
Top 5 Tamil Serial TRP
இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. அதற்கு 7.92 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த சில வாரங்களாக சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வரும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு 8.70 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளது. முதல் இரண்டு இடங்களை வழக்கம்போல் சன் டிவியின் டாப் 2 சீரியல்களான சிங்கப்பெண்ணே மற்றும் கயல் ஆக்கிரமித்துள்ளன. இதில் கயல் சீரியலுக்கு 9.02 டிஆர்பி புள்ளிகளும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.40 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... Ajith : பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்ட சரித்திர படத்துக்காக... முதன்முறையாக இணைகிறதா அஜித் - ஷங்கர் கூட்டணி?