பவா செல்லதுரை வெளியேறியதால்... இந்த வார ஏவிக்ஷனில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு!
'பிக் பாஸ்' வீட்டில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக பவா செல்லதுரை இந்த வாரம் வெளியேறி விட்டதால், எவிக்ஷன் இல்லை என்பதை விஜய் டிவி தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'பிக் பாஸ் சீசன் 7' நிகழ்ச்சி, அக்டோபர் ஒன்றாம் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியது. இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் உள்ளதால், இரண்டு வீட்டையும் சுற்றி காட்டிவிட்டு, தொகுப்பாளர் கமலஹாசன், ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
மேலும் இந்த முறை போட்டியாளர்களாக, கூல் சுரேஷ், ஜோவிகா, விஜய் வர்மா, நிக்ஸன், அனன்யா ராவ், பவா செல்லதுரை, விசித்ரா, யுகேந்திரன், விஷ்ணு, சரவணன் விக்ரம், அக்ஷயா, பூர்ணிமா, மாயா, பிரதீப், உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.
முதல் வாரத்திலேயே அதிரடி பிரச்சனைகளால், பிக் பாஸ் வீட்டை ரணகளமாகினர் போட்டியாளர்கள். அதே நேரம் ஐஷு, மணி, ரவீனா, வினுஷா போன்ற போட்டியாளர்கள்... எந்த விஷயத்திற்கும் வாயை திறக்காமல் சேப் கேம் விளையாடி வருவது போல் தோன்றுகிறது.
முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்குள் நாமினேஷன் படலம் நடத்தப்பட்டு, அனன்யா ராவ் முதல் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏவிக்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து இரண்டாவது வாரத்தில், விஷ்ணு, விசித்ரா, பூர்ணிமா, பிரதீப், மாயா, ஜோவிகா, அக்ஷயா, ஆகிய ஏழு பேர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதால் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் தரப்பில் இருந்து வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ தகவலில், "பவா செல்லதுரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியேறியதால், இந்த வாரம் எவிக்சன் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே வழக்கம்போல் எவிக்ஷன் பயத்தையும் காட்டி கடைசியில் தான் இந்த உண்மையை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D