- Home
- Gallery
- ஒன் சைடு லவ்... ஜோடி செட்டில் காதலை சொல்ல வந்த பிரபலத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தொகுப்பாளினி டிடி
ஒன் சைடு லவ்... ஜோடி செட்டில் காதலை சொல்ல வந்த பிரபலத்துக்கு அதிர்ச்சி கொடுத்த தொகுப்பாளினி டிடி
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன் மூலம் பேமஸ் ஆன டிடி-யை ஒரு தலையாக காதலித்த பிரபலம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Divyadharshini
விஜய் டிவியில் சிறுவயதில் இருந்தே தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகள் சக்கைப்போடு போட்டாலும், அவருக்கென ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது காஃபி வித் டிடி என்கிற நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியில் அவர் நேர்காணல் செய்யாத பிரபலங்களே இல்லை என சொல்லலாம். அந்த அளவுக்கு எக்கச்சக்கமான பிரபலங்களை இண்டர்வியூ எடுத்துள்ளார்.
anchor DD
காஃபி வித் டிடி நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் ரெடி ஸ்டெடி போ, ஜோடி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடிக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் ஆனது. ஸ்ரீகாந்தும், டிடி-யும் நெருங்கிய நண்பர்களாக இருந்து பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் டிடி.
இதையும் படியுங்கள்... ஆண்டவர் அப்போவே அப்படி... ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் கமலின் விண்டேஜ் கிளிக்ஸ் ஒரு பார்வை
Vijay TV Anchor DD
ஸ்ரீகாந்த் உடனான பிரிவுக்கு பின்னர் தனுஷ் இயக்கிய பா பாண்டி படத்தில் நடித்த டிடி, படிப்படியாக சின்னத்திரையில் இருந்தும் விலகினார். ஒருகட்டத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு நெடுநேரம் நிற்க முடியாத நிலை ஏற்பட்டதால் விஜய் டிவியை விட்டே விலகினார். அவ்வப்போது இசை வெளியீட்டு விழாக்களை மட்டும் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், டிடியை ஒருதலையாக காதலித்தது பற்றி பிரபலம் ஒருவர் பேசி இருக்கிறார்.
VJ Ramesh Nallayan, anchor DD
டிடி மீதான ஒன் டைடு லவ் பற்றி விஜே ரமேஷ் நல்லய்யன் பேசி உள்ளார். அதில் டிடிக்கும் தனக்கும் நல்ல நட்பு இருந்ததாக கூறிய அவர், அவரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்ட தனக்கு போகப்போக அவர் மீது கிரஷ் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் அது தனக்கு காதலாக மாறியதாகவும் கூறி உள்ளார். மேலும் அந்த காதலை டிடியிடம் சொல்ல அவரை ஜோடி செட்டில் சந்திக்க சென்ற ரமேஷுக்கு டிடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்த விஷயம் தெரியவந்து அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தாராம். அந்த சமயத்தில் நல்ல பெண்ணை மிஸ் பண்ணிட்டோமே என்று கவலையாக இருந்ததாக அவர் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... 90-களில் தல தளபதியை சம்பளத்தில் மிஞ்சிய நடிகர் பிரசாந்த் சொத்து மதிப்பு எவ்வளவு?