- Home
- Gallery
- நல்ல வேள தப்பிச்சிட்டாரு... விக்ரமின் ‘இந்த’ பிளாப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தானாம்
நல்ல வேள தப்பிச்சிட்டாரு... விக்ரமின் ‘இந்த’ பிளாப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தானாம்
சீயான் விக்ரம் நடித்து பிளாப் ஆன தமிழ் படம் ஒன்றில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தான் என்கிற தகவலை அப்படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

Vijay Milton
தமிழ் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் விஜய் மில்டன். இவர் விஜய்யின் பிரியமுடன், நெஞ்சினிலே, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததன் மூலம் தன்னுடைய பயணத்தை சினிமாவில் தொடங்கினார். இதையடுத்து சேரனின் ஆட்டோகிராப், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல், வழக்கு எண் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன், ஒரு கட்டத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
10 endrathukulla
தமிழில் அவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் கோலிசோடா. கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளர்களாக இருக்கும் சிறுவர்களை மையமாக வைத்து அப்படத்தை இயக்கி இருந்தார். கோலிசோடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இப்படத்தில் இயக்குனர் விஜய் மில்டனிடம் எச்.வினோத் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின்னரே அவர் சதுரங்க வேட்டை படத்தை இயக்கி இன்று தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக உயர்ந்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... தளபதி விஜய் டீன் ஏஜ் பருவத்திலேயே செம்ம ஸ்டைலிஷா இருக்காரே! பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
10 endrathukulla vikram
கோலிசோடா படத்தின் வெற்றிக்கு பின்னர் சீயான் விக்ரம் உடன் கூட்டணி அமைத்த இயக்குனர் விஜய் மில்டன், அவரை வைத்து 10 எண்றதுக்குள்ள திரைப்படத்தை இயக்கினார். கமர்ஷியல் படமான இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் பற்றி இயக்குனர் விஜய் மில்டன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
Vijay, VIkram
அதன்படி 10 எண்றதுக்குள்ள படத்தின் கதையை தளபதி விஜய்யிடம் தான் முதலில் சொன்னாராம் விஜய் மில்டன். விஜய்க்கும் கதை மிகவும் பிடித்துப் போனதால் இருவரும் இணைந்து பணியாற்ற பிளான் போட்டு இருக்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் விஜய்யால் அப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். அதைத் தொடர்ந்து தான் விக்ரமை வைத்து அப்படத்தை இயக்கி இருக்கிறார் விஜய் மில்டன். இதை அறிந்த ரசிகர்கள், நல்ல வேள விஜய் தப்பிச்சிட்டாரு என கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Sai Pallavi : சாய் பல்லவி திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்காரா? இதென்ன புதுக்கதையா இருக்கு!