- Home
- Gallery
- Thalapathy Vijay : இந்த முறை வைர நெக்லஸ் இல்லை.... மாணவிகளுக்கு விஜய் கொடுத்த விலையுயர்ந்த பரிசு என்ன?
Thalapathy Vijay : இந்த முறை வைர நெக்லஸ் இல்லை.... மாணவிகளுக்கு விஜய் கொடுத்த விலையுயர்ந்த பரிசு என்ன?
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா 10 மாணவிகளுக்கு நடிகர் விஜய் விலையுயர்ந்த பரிசை வழங்கி உள்ளார்.

Vijay
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னையில் இன்று கல்வி விருது விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டார்கள். இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த மாணவ, மாணவிகளுக்கு காலை, மதியம் என இரு வேளையும் சிறப்பு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு பரிமாறப்பட்டது.
TVK vijay
விழாவுக்கு காலை 10 மணிக்கு வருகை தந்த நடிகர் விஜய், தன்னுடைய உரையை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக முடித்துவிட்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கத் தொடங்கினார். அதன்படி தமிழக அளவில் அதிக மதிப்பெண் வாங்கிய டாப் 10 மாணவிகளுக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை மட்டுமின்றி வைர கம்மலையும் பரிசாக வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய். கடந்த முறை முதலிடம் பிடித்த மாணவிக்கு மட்டும் வைர நெக்லஸ் வழங்கிய விஜய் இம்முறை 10 மாணவிகளுக்கு வைரக்கம்மல் வழங்கினார்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டுக்கு தலைவர்கள் தேவை... போதைப்பொருள் வேண்டாம் - மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த தளபதி விஜய்
Thalapathy Vijay
அதன்படி முதலாவதாக 12ம் வகுப்பில் சாதித்த மாணவிகளான, சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியை சேர்ந்த மாணவி பிரதிக்ஷாவிற்கு வைரக்கம்மல் வழங்கினார் விஜய். அதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியை சேர்ந்த மாணவி மகாலட்சுமிக்கு வைரக்கம்மல் வழங்கப்பட்டது. அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியை சேர்ந்த மாணவி தொஷிதா லட்சுமிக்கு சால்வை அணிவித்தும், சான்றிதழ் மற்றும் வைரக்கம்மல் வழங்கினார் விஜய்.
Vijay Gifts Diamond Earring
அடுத்ததாக 10ம் வகுப்பு தேர்வில் சாதித்த, தர்மபுரி மாவட்டம் கரூர் தொகுதி மாணவி சந்தியாவுக்கு வைரக்கம்மல் வழங்கினார் விஜய். பின்னர் தருமபுரி மாவட்டம் மரூர் தொகுதியை சேர்ந்த தேவதர்ஷினி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த காவியாஸ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் தொகுதி மாணவி ஆர்.கோபிகா, ராம்நாதபுரம் மாவட்டம் முதுகுலத்தோரை சேர்ந்த மாணவி காவியா ஜனனி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி மாணவி சஞ்சனா உள்ளிட்டோருக்கும் வைரக்கம்மல் பரிசாக அளித்தார் விஜய்.
இதையும் படியுங்கள்... Vijay : அரசியல் எண்ட்ரிக்கு பின் தளபதியின் முதல் ஸ்பீச் கேட்க ரெடியா? விஜய் கல்வி விருது விழா நேரலை வீடியோ இதோ