- Home
- Gallery
- இது நல்லாருக்கே... தல போஸில் தளபதி! கல்வி விருது விழாவில் அஜித் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்
இது நல்லாருக்கே... தல போஸில் தளபதி! கல்வி விருது விழாவில் அஜித் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்
நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் தன்னிடம் அஜித் போல் போஸ் கொடுக்க சொன்ன மாணவியின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் தளபதி.

vijay
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி வரும் அப்படத்தின் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். ஹெச்.வினோத் இப்படத்தை இயக்க உள்ளாராம். இதுதான் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமாகும். அப்படத்துக்கு பின் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
Thalapathy Vijay
விஜய்யின் அரசியல் பயணத்தின் ஒருபகுதியாக, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கெளரவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக டாப் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்து வருகிறார் விஜய், இந்நிகழ்ச்சி திருவான்மியூரில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... 'கல்வி விருது விழா' தளபதியின் மாஸ் என்ட்ரி முதல்.. வைர மோதிரம் - ஊக்கத்தொகை வழங்கியது வரை! வைரல் போட்டோஸ்!
Vijay Education Awards
இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து வேன் மூலம் மாணவ, மாணவிகளை அழைத்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி வந்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவ, மாணவிகளை மேடையில் கெளரவப்படுத்தும் போது நடிகர் விஜய் அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டுவருகிறார். அப்போது மாணவிகள் தன்னிடம் ஆசையாக கேட்கும் விஷயங்களையும் விஜய் செய்வது வழக்கம்.
Vijay in Good Bad Ugly Pose
அந்த வகையில் இன்று விஜய் கையால் கல்வி ஊக்கத்தொகை வாங்க வந்த மாணவி ஒருவர், விஜய்க்கு ஒரு போஸ் ஒன்றை சொல்லிக்கொடுத்து அதன்படி போட்டோ எடுக்குமாறு அறிவுறுத்தினார். விஜய்யும் அவ்வாறே போஸ் கொடுத்துள்ளார். அது, நேற்று வெளிவந்த அஜித்தின் குட் பேட் அக்லி பட போஸ்டரில் இடம்பெற்ற போஸ் என்பது தெரியவந்துள்ளது. அஜித்தைப் போலவே போஸ் கொடுத்து அந்த அஜித் ரசிகையின் ஆசையை விஜய் நிறைவேற்றி இருக்கிறார். இதனால் அந்த பெண் செம குஷி ஆனார்.
இதையும் படியுங்கள்... Thalapathy Vijay : இந்த முறை வைர நெக்லஸ் இல்லை.... மாணவிகளுக்கு விஜய் கொடுத்த விலையுயர்ந்த பரிசு என்ன?