- Home
- Gallery
- Box Office King Vijay : கோலிவுட்டின் ‘கோட்’... தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆனது எப்படி? ஓர் அலசல்
Box Office King Vijay : கோலிவுட்டின் ‘கோட்’... தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆனது எப்படி? ஓர் அலசல்
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உயர்ந்தது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Vijay
தளபதி விஜய், தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்துபோன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லும் அலைகடலென திரண்டு வரும் தீவிர ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருவெடுத்துள்ளவர் தான் விஜய். தனது தந்தையின் கரம்பற்றி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதன்பின் தனக்கான பாதையை விடாமுயற்சியால் தானே அலங்கரித்து இன்று ஆளப்போறான் தமிழன் என எல்லைகளைக் கடந்து வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார் விஜய்.
Thalapathy Vijay
ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தன் தந்தையின் இயக்கத்திலேயே நடித்து வந்தாலும், அவை எதுவும் விஜய்க்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. அப்படியான தருணத்தில் வெளிவந்த விக்ரமனின் பூவே உனக்காக திரைப்படம், இயக்குனரின் மகன் என்கிற இமேஜில் இருந்து விஜய்யை வெற்றிப்பட நாயகனாக மாற்றியது. பார்க்க பக்கத்து வீட்டு பையன் போலவே இருக்காரு என எதை தனது மைனஸாக சொன்னார்களோ அதையே பிளஸ் ஆக மாற்றி காட்டினார் விஜய்.
Vijay Birthday
அடுத்தடுத்து மென்மையான காதல் படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை குவித்த விஜய், அதன்மூலம் முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக 2000-ம் ஆண்டுக்கு பின் வெளியான குஷி, பிரியமானவளே, ப்ரண்ட்ஸ் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றி, தமிழ் சினிமாவில் விஜய்க்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொடுத்தது. அவரது நடனமும், துள்ளலான நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவருக்கென தனி ரசிகர் வட்டாரமும் உருவாக தொடங்கியது.
இதையும் படியுங்கள்... Vijay Car Collection: தளபதியின் முதல் கார் முதல்... தற்போதைய டாப் மாடல் லக்ஸூரியஸ் கார் வரை! முழு விவரம்!
HBD Vijay
காதல் படங்களில் தொடர் வெற்றிகளை குவித்து வந்தாலும், தான் ஆசைப்பட்டு மாற நினைத்த ஆக்ஷன் ரூட்டுக்கு அதற்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த படம் திருமலை. அதன்பின்னர் வெளிவந்த கில்லி திரைப்படம் தமிழ் சினிமாவின் முதல் 50கோடி வசூல் செய்த படம் என்கிற சாதனையை படைத்து, விஜய்யை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றியது. அப்போது அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என்கிற குரல்களும் தமிழகமெங்கும் ஒலிக்க தொடங்கின.
Vijay 50th Birthday
கில்லியை தொடர்ந்து திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என வரிசையாக பாக்ஸ் ஆபிஸில் அடுத்தடுத்த கமர்ஷியல் வெற்றிகளை குவித்த விஜய், அதன்மூலம் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் என்பதை தாண்டி, அடுத்த விஜய் யார் எனும் போட்டியை இளம் நடிகர்களிடையே ஏற்படுத்தினார். இப்படி வெற்றிநடை போட்டு வந்த விஜய்யின் கெரியரில் அதன் பின் ஒரு சறுக்கல் ஏற்பட்டது. தன் மீது விழும் விமர்சனங்களை எப்போதும் ஓரம்கட்டும் விஜய், அதில் இருக்கும் நியாயத்தை மட்டும் எப்போதும் ஏற்றுக்கொள்வார்.
Vijay Birthday Special
அந்த வகையில், ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்கிற விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட அவர், அதன்பின்னர் வித்தியாசமான கதைகளில் நடிக்க தொடங்கினார். அந்த வரிசையில் வெளியான காவலன், வேலாயுதம், நண்பன் போன்ற படங்களின் வெற்றி, துவண்டு போன விஜய்யின் கெரியரை தலைநிமிரச் செய்தது. பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தன.
Box Office King Vijay
ஆரம்பத்தில் ஒரு வெற்றிக்காக பல வருடங்கள் போராடிய விஜய், இன்று மூன்று 300 கோடி படங்களை கொடுத்த ஒரே தமிழ் நடிகர் என்கிற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார். குறிப்பாக கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து, விஜய்யின் கெரியரில் அதிகம் வசூலித்த படமாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய பாக்ஸ் ஆபிஸ் நாயகன் அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகுவது கோலிவுட்டுக்கு பெரும் இழப்பாக அமையும் என்பது மாற்றுக்கருத்தில்லை.
இதையும் படியுங்கள்... Vijay First Salary: இன்று ரூ.200 கோடி சம்பளம் வாங்கும்... தளபதி விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?