- Home
- Gallery
- அழகூரில் பூத்தவர்கள்... மனைவி நயன் மற்றும் மகன்கள் மீது பாசமழை பொழிந்த விக்னேஷ் சிவன் - லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ
அழகூரில் பூத்தவர்கள்... மனைவி நயன் மற்றும் மகன்கள் மீது பாசமழை பொழிந்த விக்னேஷ் சிவன் - லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ
நடிகை நயன்தாரா மற்றும் அவரது மகன்கள் உயிர், உலகின் அழகான கேண்டிட் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டு உள்ளார்.

vignesh shivan, nayanthara
கோலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக திகழ்ந்து வருபவர்கள் தான் விக்கி - நயன். இவர்கள் இருவரும் முதன்முதலில் நானும் ரெளடி தான் படத்தில் பணியாற்றியபோது தான் சந்தித்துக் கொண்டனர். விக்கி கதை சொல்ல வந்தபோதே அவர்மீது நயனுக்கு கிரஷ் வந்துவிட்டது. பின்னர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
vignesh shivan, Nayanthara kids
நானும் ரெளடி தான் ஷூட்டிங் சமயத்திலேயே இருவரும் காதலித்து வந்தது அந்த படக்குழுவுக்கே தெரியாதாம். அந்த அளவுக்கு கமுக்கமாக காதலித்து வந்துள்ளனர். நடிகை ராதிகாவே இதை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். படம் முழுக்க நடித்தும் எனக்கு கூட தெரியாமல் இருவரும் காதலித்தனர் என்று ஆச்சர்யமாக கூறி இருந்தார்.
Nayanthara and vignesh shivan Family
அப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் தான் விக்கி நயன் ஜோடியின் காதல் விவகாரம் லீக் ஆனது. பின்னர் இருவருமே தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கும் விதமாக விருது விழாக்களில் ஜோடியாக கலந்துகொள்ள ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி விக்னேஷ் சிவன் உடன் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதராக வாழ்ந்தும் வந்தார் நயன்.
இதையும் படியுங்கள்... Varalaxmi : பொண்ணு ரெடி.. மாப்பிள்ளையும் ரெடி.. ஜோராக துவங்கிய ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் - கூல் கிளிக்ஸ்!
vignesh shivan with his sons
சுமார் 7 ஆண்டு காதல் வாழ்க்கைக்கு பின் விக்கி - நயன் ஜோடி கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற அவர்களது திருமணத்தில் கோலிவுட் சூப்பர்ஸ்டார் முதல் பாலிவுட் பாட்ஷா வரை ஏராளமான பிரபலங்கள் படையெடுத்து வந்து வாழ்த்தினர்.
uyir and Ulag
திருமணமான நான்கே மாதத்தில் விக்கி நயன் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அது எப்படி நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது என அனைவரும் ஷாக் ஆக, தாங்கள் வாடகைத் தாய் மூலம் அந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டதாக அறிவித்தனர். அவர்களுக்கு உயிர், உலக் என பெயரிட்டு உள்ளனர்.
vignesh shivan latest click with Nayanthara
இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தன் மகன்களுடன் கொஞ்சி விளையாடும் போது எடுத்த கேண்டிட் புகைப்படங்களை பதிவிட்டு, அழகூரில் பூத்தவர்களே என கேப்ஷனும் கொடுத்துள்ளார். இறுதியாக நயன்தாராவின் புகைப்படத்தையும் பதிவிட்டு அவர்மீதுள்ள காதலையும் வெளிப்படுத்தி இருக்கிறார் விக்கி. அந்த புகைப்படங்கள் வைரலாகிறது.
இதையும் படியுங்கள்... Ajith : அஜித் மேல் அவ்வளவு பாசம்.. அவரை அரசியலுக்கு அழைத்த "அம்மா" - ஜெயலலிதா பற்றி மனம் திறந்த பிரபலம்!