MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • இந்த முறை பிரியாணி இல்ல... ஸ்பெஷல் டிஷ் சமைத்து விடாமுயற்சி படக்குழுவுக்கு அஜித் வைத்த சர்ப்ரைஸ் விருந்து!

இந்த முறை பிரியாணி இல்ல... ஸ்பெஷல் டிஷ் சமைத்து விடாமுயற்சி படக்குழுவுக்கு அஜித் வைத்த சர்ப்ரைஸ் விருந்து!

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள நடிகர் அஜித்குமார், படக்குழுவினருக்காக தன் கையால் சமைத்து உணவளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 17 2023, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ajith

ajith

நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் ரைடிங் செய்வது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கெடுப்பது, கல்லூரி மாணவர்களுக்கு டுரோன் பயிற்சி அளிப்பது, புகைப்படக் கலைஞராக போட்டோ எடுப்பது என பல்வேறு பிற வேலைகளிலும் முழு ஈடுபாட்டோடு செய்வது அனைவரும் அறிந்தது. இதுமட்டுமின்றி அஜித்துக்கு சமையல் மீதும் அதீத ஆர்வம் இருக்கிறது. தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் உணவு சமைப்பதில் ஆர்வம் காட்டுவாராம் அஜித்.

24
ajith cooking

ajith cooking

அவர் ஏற்கனவே மங்காத்தா பட ஷூட்டிங் சமையத்திலும் வீரம் பட ஷூட்டிங் சமையத்திலும் படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து கொடுத்தது பரவலாக பேசப்பட்டது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் விடாமுயற்சி பட ஷூட்டிங் ஸ்பாட்டிலும் தன் கைவண்ணத்தை காட்டி இருக்கிறார் அஜித். அங்கிருக்கும் படக்குழுவினருக்காக தன் கையால் ஒரு ஸ்பெஷல் உணவு ஒன்றை செய்துகொடுத்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
ajithkumar

ajithkumar

வழக்கமாக பிரியாணி செய்து அசத்தும் அஜித், இந்த முறை வித்தியாசமாக தன்னுடைய சிக்னேச்சர் டிஷ் ஆன சிக்கன் கிரேவியை செய்துகொடுத்து அசத்தி இருக்கிறார். விடாமுயற்சி பட ஷூட்டிங் சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் இந்த சிக்கன் கிரேவியை செய்து படக்குழுவினருக்கு சர்ப்ரைஸாக பரிமாறி இருக்கிறார் அஜித். அதை சாப்பிட்ட அனைவரும் டேஸ்ட் அற்புதமாக இருந்ததாக பாராட்டியதோடு, அஜித்திற்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்கள்.

44
vidaamuyarchi ajith

vidaamuyarchi ajith

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும், வில்லனாக பிக்பாஸ் பிரபலம் ஆரவ்வும் நடிக்கின்றனர். மேலும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தேர் திருவிழா’ கொண்டாட ரெடியா? சர்ப்ரைஸாக வந்த லால் சலாம் பட பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved