- Home
- Gallery
- Actress Meena : அதே கலகலப்பான சிரிப்பு.. நண்பிகளோடு செம Fun - கண்ணழகி மீனாவின் லேட்டஸ்ட் கூல் கிளிக்ஸ்!
Actress Meena : அதே கலகலப்பான சிரிப்பு.. நண்பிகளோடு செம Fun - கண்ணழகி மீனாவின் லேட்டஸ்ட் கூல் கிளிக்ஸ்!
Actress Meena : தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மூத்த தமிழ் திரை உலக நடிகை மீனா.

Actress Sangeetha
கடந்த 1976ம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை மீனா, தனது 8வது வயது முதல் திரைத்துறையில் பயணித்து வருகிறார். கடந்த 1982ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாட "நெஞ்சங்கள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
Meena
அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தெலுங்கு திரைப்படங்கள் மூலம் தான் நாயகியாக அறிமுகமானார். தமிழில் கடந்த 1991ம் ஆண்டு வெளியான "என் ராசாவின் மனசினிலே" என்கின்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
tamil actress meena
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு மட்டுமல்லாமல் உலகநாயகன் கமலஹாசன், பிரபு, சத்யராஜ் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பலரோடு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள நடிகை மீனா, அதை நாயகர்களோடு பிற்காலத்தில் நாயகியாக ஜோடி போட்டதும் குறிப்பிடத்தக்கது.
veteran actress Meena
தமிழ் சினிமாவில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாக மூத்த சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மீனாவிற்கு, கடந்த 2009ம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரோடு திருமணம் நடந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அவர் காலமானார்.
kollywood actress
இப்போது மீனாவின் மகளும் தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இறுதியாக மீனா தமிழில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த" திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது "ரவுடி பேபி" என்கின்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
kollywood actress Meena
நடிகை மீனாவிற்கு இதுவரை தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும், பல முறை சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், தமிழ்நாடு அரசு வழங்கும் மாநில விருதுகள் என்று பல விருதுகளை வாங்கியுள்ளார். கடந்த 1998ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
Matka Movie: 15 கோடி பணத்தை கொட்டி வைஸாக் நகரை உருவாக்கிய 'மட்கா' படக்குழு!