"இப்போ கூட அவங்கள கல்யாணம் பண்ணிக்க தயார்" முன்னாள் காதலி குறித்து மனம் திறந்த பாரதி ராஜா!
Bharathi Raja : அல்லி நகரத்திலிருந்து புறப்பட்டு இன்று கோலிவுட் உலகின் மிக மூத்த இயக்குனராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பாரதிராஜா.
16 Vayathinile
இப்போது 85 வயதாகும் இயக்குனர் பாரதிராஜா, கடந்த 1977ம் ஆண்டு தமிழில் வெளியான "16 வயதினிலே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தனது முதல் திரைப்படத்திலேயே தமிழக அரசு வழங்கும் மாநில விருதை வென்று அசத்திய இயக்குனர் இவர். அது மட்டுமல்ல அவருடைய 43 ஆண்டுகால திரை உலக பயணத்தில், மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை வென்று அசத்தியிருக்கிறார்.
பிரபுதேவா போட்ட 3 கண்டிஷன்... ஏற்க மறுத்து காதலை தூக்கி எறிந்த நயன்தாரா! பிரேக் அப் ஸ்டோரி
Bharathiraja movies
ஒட்டுமொத்த கோலிவுட் உலகமும் நகரமயமாய் மாறிக்கொண்டிருந்த நேரத்தில், அதை மீண்டும் கிராமத்து மண் வாசனைக்கு திருப்பியதில் மிகப்பெரிய பங்கு பாரதிராஜாவுக்கு உண்டு. இவருடைய இயக்கத்தில் வெளியான "கிழக்கே போகும் ரயில்", "சிவப்பு ரோஜாக்கள்", "புதிய வார்ப்புகள்", "நிழல்கள்" மற்றும் "மண்வாசனை" என்று பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறியது.
Director Bharathiraja
இன்றளவும் நல்ல பல திரைப்படங்களை இயக்கி வரும் பாரதிராஜா, அண்மையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனோடு இணைந்த ஒரு பேட்டியில் தனது காதலி குறித்து பேசியுள்ளார். பள்ளி பருவத்தில் இருந்தே நான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் இறுதிவரை அது நிறைவேறாமலேயே போனது என்றும் கூறியிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அவரை ஒரு கடைத்தெருவில் சந்தித்து பேசியதாக பகிர்ந்துள்ளார்.
Bharathi raja
அண்மையில் கூட அந்த காதலி, தனது பேத்தியின் கல்யாணத்துக்கு தன்னிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக கூறிய பாரதிராஜா, இப்பொது கூட அவரை திருமணம் செய்துகொள்ள தான் தயார் என்று கூறியுள்ளார். ஆனால் கல்யாணம் செய்துகொண்டால் அந்த காதல் போய்விடும். காரணம் காதல் என்பது எதிர் எதிரே உள்ள தண்டவாளம் போல, அவை சேராமல் இருந்தால் தான் காதல், காதலாக இருக்கும் என்றார்.
ஆஸ்கர் நாயகனுக்கு விழா.. மேடையிலேயே சூசகமாக மட்டம் தட்டிய இளையராஜா - பதிலுக்கு அன்பால் அடித்த ARR!