ரஜினிகாந்த்.. சிரஞ்சீவியுடன் நடித்து அசத்திய கண்ணழகி மாதவி - இப்ப எப்படி இருக்காங்க பாருங்க!!
Actress Madhavi : தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடிகை ஸ்ரீதேவிக்கு இணையான புகழோடு வலம் வந்த மூத்த நடிகை தான் மாதவி.
Kollywood Actress Maadhavi
தனது 14வது வயதிலேயே திரைத்துறையில் அறிமுகமாகி வெகு சில ஆண்டுகள் மட்டுமே நாயகியாக பயணித்தாலும், புகழின் உச்சியில் இருக்கும் காலத்திலேயே சினிமாவை விட்டு விலகிய நடிகை தான் மாதவி. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே பல மேடைகளில் தனது பரதநாட்டிய கலையை அரங்கேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1970களின் இறுதியில் தொடங்கி, 1980களின் இறுதிவரை டாப் நாயகியாக வலம் வந்த வெகு சில நடிகைகளில் மாதவியும் ஒருவர்.
மாடல் அழகி.. பல் மருத்துவர்.. இன்னும் பல திறமைகள் - யம்மாடியோ என வியக்க வைக்கும் தளபதியின் நாயகி!
Veteran Actress Maadhavi
கடந்த 1976ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் மாதவி. ஹிந்தியில் கடந்த 1981ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட் ஆன கமலின் "ஏக் துஜே கேலி யே" திரைப்படத்தின் மூலம் பாலிவுட் உலகில் அறிமுகமானார். ஹிந்தி, தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள மாதவி 1979ம் ஆண்டு முதல் 1982ம் ஆண்டுக்குள் 5 மொழிகளில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார்.
Actress Maadhavi Husband
திரைத்துறையில் பயணித்து வந்த அதே நேரம், ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நடிகை மாதவி, சுவாமி ராமா என்பவரின் சிஷ்யயாக இருந்து வந்தார். அப்போது கடந்த 1995ம் ஆண்டு சுவாமி ராமா மூலம் தான் சர்மா என்பவருடைய அறிமுகம் அவருக்கு கிடைத்தது. சர்மாவும் சுவாமி ராமாவின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சந்திப்பு காதலாக மாற, 1996ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று இந்த ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்தது. தற்பொழுது நியூ ஜெர்சியில் தனது கணவர் மற்றும் மூன்று பெண் குழந்தைகளோடு அவர் வாழ்ந்து வருகிறார்.
Maadhavi
தமிழில் கடந்த 1990ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "அதிசய பிறவி" என்கின்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றியிருப்பார் நடிகை மாதவி. அதன் பிறகு மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் 1995ம் ஆண்டு வரை நடித்து வந்த மாதவி, தனது கணவரை மணமுடித்த பிறகு தனது திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மாடல் அழகி.. பல் மருத்துவர்.. இன்னும் பல திறமைகள் - யம்மாடியோ என வியக்க வைக்கும் தளபதியின் நாயகி!