"என் பேரன் ராஜ ராஜ சோழன் வம்சம்" - வனிதாவின் மகனை வாழ்த்திய தாத்தா விஜயகுமார்!
Vanitha Vijayakumar : வனிதா விஜயகுமாரின் மகனும், மூத்த தமிழ் திரை உலக நடிகர் விஜயகுமாரின் பேரணுமான விஜய் ஸ்ரீஹரி ஹீரோவாக தமிழ் திரை உலகில் களமிறங்க உள்ளார்.

vanitha
தமிழ் திரை உலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த குணச்சித்திர நடிகராக பயணித்து வருபவர் தான் விஜயகுமார். இவருடைய இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவிற்கு பிறந்த பெண் தான் நடிகை வனிதா விஜயகுமார். இப்பொது அவர் தனது குடும்பத்தை விட்டு தனித்து வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.
VDK மாதிரி ஆகலாம்னா.. உங்கள மாதிரி ஆகிவிட்டான்.. கலாய்த்த நெட்டிசன் - கியூட் ரிப்ளை கொடுத்த தமன்னா!
prabhu solomon
வனிதா விஜயகுமாரின் முதல் கணவரான ஆக்ஷின் மகன் தான் ஸ்ரீஹரி. தற்பொழுது திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கி உள்ளார். பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் "மாம்போ" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார். ஒரு சிங்கத்திற்கும், மனிதனுக்கும் இடையிலான கதைகளத்தை கொண்ட திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.
Mambo
இந்த திரைப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய நடிகர் விஜயகுமார் தனது பேரன் சிறுவயது முதலிலேயே பள்ளியிலும், கல்லூரியிலும் சிறந்த மாணவனாக விளங்கியவன் என்றார். வெளிநாட்டுக்கு சென்று சினிமா சம்பந்தமான பல விஷயங்களை கற்றுள்ள அவர், தற்பொழுது நடிகனாக களமிறங்குகிறார் என்றும் கூறியிருந்தார்.
rajini and vijayakumar
அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தனது பேரன் குறித்து பேசிய பொழுது, பிரபு சாலமன் மிகச் சிறந்த இயக்குனர் என்றும், அவர் அறிமுகம் செய்யும் ஸ்ரீஹரி மிகச் சிறந்த முறையில் ஹீரோவாக வருவார் என்றும் சூப்பர் ஸ்டார் ஆசி கூறியதாக விஜயகுமார் கூறினார். மேலும் தனது பேரன் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் வம்சத்தை சேர்ந்தவன் என்பதால், அவருடைய ஆசீர்வாதமும் எனது பேரனுக்கு இருக்கும் என்று கூறியிருக்கிறார் விஜயகுமார்.
சுதந்திரத்துக்கு முந்தைய கதை.. யோகி பாபு படகோட்டியாக அசத்தும் "Boat" - ட்ரைலர்!