Vijayakanth: விஜயகாந்தின் Net Worth எவ்வளவு தெரியுமா? ரஜினி, கமல், விஜய் சொத்தில் கால்வாசி கூட இல்லையே பாஸ்!
பிரபல அரசியல்வாதியும் நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி, ரசிகர்களையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Vijayakanth
90-களில், தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த, மிக முக்கிய நடிகர்களில் கேப்டன் விஜயகாந்தும் ஒருவர். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு நிகராக சம்பளம் வாங்கியவர். நடிப்பில் மட்டும் அல்ல அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Vijayakanth Debut Movies:
விஜயகாந்த் கோலிவுட் திரையுலகில் நடிகர் என்பதை தாண்டி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகவும் வெற்றி கண்டவர். இதுவரை சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், திரை உலகில் அறிமுகமான 1980 -ம் ஆண்டிலேயே நீரோட்டம்,சாமந்திப்பூ, தூரத்து இடி முழங்குது என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்தார். இதில் தூரத்து இடி முழங்குது, படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்தடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சிவாஜி, ரஜினிகாந்த், வஹீதா ரஹ்மான் உள்பட.. தாதாசாகேப் பால்கே விருது பெற்ற பிரபலங்களின் விவரம்!!
Vijayakanth Produced Movies:
மிகவும் போராடி, முன்னணி நடிகராக உயர்ந்த விஜயகாந்த் 90 களில் கொடிகட்டி பறந்தார். மேலும் தன்னுடைய மைத்துனர் எல்.கே.சுதீஷுடன் இணைந்து, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் சில படங்களை தயாரித்து நடித்தார். அப்படி இவர் தயாரித்து - நடித்த வல்லரசு, நரசிம்மா, தென்னவன், எங்கள் அண்ணா, சுதேசி, அரசங்கம், விருத்தகிரி,சகாப்தம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில படங்கள் வெற்றிபெற்றாலும், பல படங்கள் தோல்வியை தழுவியதால் நஷ்டத்தை சந்தித்தார்.
Vijayakanth political Entry:
அதிரடியாக அரசியலிலும் இறங்கினார் விஜயகாந்த். அரசியலில் காலடி வைக்க முடிவு செய்த பின்னர், கையில் போதிய பணம் இல்லாததால்.. தன்னுடைய சொத்துக்களை விற்று, அரசியலுக்காக செலவு செய்தார். மேலும் விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. கூட்டணி வைத்து வெற்றிபெற்றாலும், இடையில் ஜெயலலிதாவுடன் கருத்து மோதல் ஏற்பட்டு தனியாக பிரிந்து எதிர்க்கட்சியாக செயல்பட்டார் விஜயகாந்த்.
vijayakanth family
மூன்று தலைமுறை ரசிகர்களை தன் நடிப்பால் ஈர்த்து வைத்திருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கம்பீரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவரது பல படங்களும் 100 நாட்களைக் கடந்து சாதனை படைத்திருந்தது. கிராமத்து இளைஞனாக கோலிவுட்டில் அறிமுகமான விஜயகாந்த் அசைக்க முடியாத பிம்பமாக இருந்து வந்தார்.
Vijayakanth Sickness:
அரசியல் தலைவரான பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட விஜயகாந்த், கடந்த 2010 ம் ஆண்டு தனது மகன் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம், படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்றொரு படத்தில் விஜயகாந்த் நடிக்க இருந்த நிலையில், விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரால் திரைப்படங்களில் மட்டும் அல்ல அரசியலிலும் கவனம் செலுத்த முடியாமல் போனது.
தற்போது தேமுதிக கட்சி, மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதால்... மீண்டும் கட்சியை எழுச்சி பெற வைக்க... பிரேமலதா விஜயகாந்த், மற்றும் அவரின் மகன்கள் முழு கவனம் செலுத்தி வருகிறார்கள். விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தேமுதிகாவின் நகர்வு எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Vijayakanth Networth:
இது ஒருபுறம் இருக்க, தற்போது விஜயகாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அதன்படி விஜயகாந்துக்கு 45 முதல் 50 கோடி தான் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைதளத்தில் இப்படி வெளியாகும் தகவலை வைத்து பார்த்தால், கமல், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களை விட மிக குறைவாகவே விஜயகாந்த் சொத்து வைத்துள்ளது தெரிகிறது. அதே நேரம் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலங்கள் கலந்து கொண்ட இயக்குனர் - நடிகர் விக்னேஷ் கார்த்தியின் வெட்டிங் ரிசெப்ஷன் போட்டோஸ்!