- Home
- Gallery
- நக்கல் மன்னனின் அடுத்த படம் ரெடி.. கவுண்டமணி கலக்கும் "ஒத்த ஓட்டு முத்தையா" - வெளியான First Look போஸ்டர்!
நக்கல் மன்னனின் அடுத்த படம் ரெடி.. கவுண்டமணி கலக்கும் "ஒத்த ஓட்டு முத்தையா" - வெளியான First Look போஸ்டர்!
Actor Goundamani : பிரபல நடிகர் கவுண்டமணி நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ஒத்த ஓட்டு முத்தையா. இந்த படத்தின் First Look போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

Goundamani First Movie
தமிழ் சினிமாவில் கடந்த 1964ம் ஆண்டு வெளியான மூத்த நடிகர் நாகேஷின் "சர்வர் சுந்தரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய மாபெரும் கலைஞன் தான் நக்கல் மன்னன் கவுண்டமணி.
Senthil
தமிழ் சினிமாவில் கடந்த அரை நூற்றாண்டைக் கடந்து, 60 வருடங்களாக சிறந்த நடிகராக விளங்கி வரும் கவுண்டமணி, நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என்று பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்தவர்.
Actor Goundamani
ஒரு படம் துவங்கும் பொழுது அந்த படத்தில் நடிக்கும் ஹீரோவின் கால்ஷீட் வாங்குவதற்கு முன்பாக கவுண்டமணியின் கால் சீட்டை முதலில் வாங்கி விடுவார்களாம். வருடத்திற்கு 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் சாதனை படைத்த கவுண்டமணி, இறுதியாக தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "வாய்மை" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Goundamani New Movie
இந்த நிலையில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஒத்த ஓட்டு முத்தையா" என்கின்ற திரைப்படத்தில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உன்னிட்ட பலர் நடித்துள்ள நிலையில், இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.