மறைந்த நடிகர் மாரிமுத்து.. இறுதியாக தன் போனில் அவர் எடுத்த வீடியோ என்ன தெரியுமா? - உண்மையில் கிரேட் சார் நீங்க
ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழக மக்களும் பெரும் துயரத்திற்கு உள்ளான ஒரு நாள் தான் பிரபல நடிகர் மாரிமுத்து அவர்கள் இறந்த அந்த நாள். கனவில் கூட யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு மரணமாக மக்களின் மனதில் நீங்காத சுவாடாக பதிந்து சென்றுள்ளார் நடிகர் மாரிமுத்து என்றால் அது மிகையல்ல.
Marimuthu
இளம் வயது முதலிலேயே தன் வறுமையை எதிர்த்து போராடி திரைப்படத்தில் தனக்கான முத்திரையை பதிக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு வாழ்ந்து, பெரும் முயற்சிகளோடு பயணித்த ஒரு நடிகர் தான் மாரிமுத்து. கடந்த சில நாட்களாகவே அவருடைய இறப்புக்கு பிறகு அவர் குறித்த பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது.
கல்யாணமாகி 14 வருஷமாச்சு.. இப்பொது குழந்தையை தத்தெடுக்க காரணம் என்ன? - மனம் திறந்த அபிராமி!
Director Marimuthu
குறிப்பாக அவர் சில திரைப்படங்களில் சின்னஞ்சிறு வேடங்கள் ஏற்று நடித்து உள்ளிட்டவை இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் அவர் தனது செல்போனில் இறுதியாக பதிவு செய்த வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் எதிர்நீச்சல் சீரியலில் தனது மகளாக நடித்துவரும் தர்ஷினி என்ற சிறுமியின் சகோதரிக்கு மாரிமுத்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Ethirneechal Serial Actor Marimuthu
தர்ஷினியாக நடித்து வரும் சிறுமியின் பெயர் மோனிஷா, அந்த வீடியோவில் மோனிஷாவின் தங்கைக்கு தான் அவர் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அந்த பதிவில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் மா.. நான் மோனிஷாவுக்கு அப்பா என்றால் உனக்கும் தான் அப்பா.. என்னுடைய மகளை எனக்கு எந்த அளவிற்கு பிடிக்குமோ.. அதே அளவுக்கு உன்னையும் எனக்கு பிடிக்கும். நீங்கள் இருவரும் உங்களுடைய திறமைகளை இன்னும் அதிக அளவில் வெளிகொண்டுவர வேண்டும்".
Marimuthu Ethirneechal
"இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு நீங்கள் பரிசுகளை வெல்ல வேண்டும், உனக்கு வெளிநாடுகளின் மீது அதிக ஆசை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். ஆகையால் நீ பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்றும் உன் கனவுகளை நிறைவேற்ற வேண்டும். உன் சகோதரியை போலவே நீயும் குத்துச்சண்டை, வாள் வீச்சு என்று பல துறைகளில் சாதிக்க வேண்டும்" என்று அந்த சிறுமியை வாழ்த்தி பேசியுள்ளார் அவர்.
லோகேஷின் சக்சசுக்கு காரணம் ஸ்டண்ட் மாஸ்டர்களின் உழைப்பா? இல்ல ஆவர் டைரக்ஷனுக்கு கிடைக்கும் வெற்றியா?